பிசாசு-2 திரைப்படத்தின் புதிய அப்டேட் - ஓகே சொன்ன ஆண்ட்ரியா ஜெர்மியா..! | New update of the Pisasu-2 movie

              தமிழ் திரையுலகில் ஒரு பெண் முன்னணி  நடிகையாக அதிக நாட்கள் வலம் வருவது என்பது மிகப் பெரிய சவாலாக கருதப்படுகிறது. அந்த வகையில் நயன்தாரா , திரிஷா வரிசையில் ஏறக்குறைய 15 ஆண்டுகளாக தனக்கென ஒரு அடையாளத்தை தமிழ் திரையுலகில் பதித்தவர் ஆண்ட்ரியா ஜெர்மியா. தொடக்க காலகட்டத்தில் ஒரு பாடகியாக, பின்னணி குரல் கலைஞராக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் ஆண்ட்ரியா ஜெர்மியா. இவர் தன்னுடைய நடிப்பு திறமையினாலும் அழகான தோற்றத்தினாலும் கண்ட நாள் முதல் என்னும் தமிழ் படத்தில் அறிமுகம் ஆகி, பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் திரையுலகில் ஏற்படுத்திக்கொண்டார்.

    
            தான் நடிக்கும் படங்களில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே ஏற்று நடிக்கும் இவர் மிகவும் சர்ச்சைக்குள்ளான கதாபாத்திரங்களையும் எந்த பயமுமின்றி தைரியமாக நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்து வெளியான திரைப்படம் தான் 2017-ஆம் ஆண்டு வெளியான தரமணி. இந்தத் திரைப்படம் வெளியான போது இந்தப் படத்திற்கு மக்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இப்படத்தில் பெண்கள் ஆண் துணை இல்லாமல் தங்கள் வாழ்க்கையில் படும் கஷ்டங்களை எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்பதை மிகவும் எதார்த்தமாக சொல்லி இருப்பார் இயக்குனர் ராம். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.எதிர் பார்த்த அளவிற்கு இந்த படம் வெற்றி அடையவில்லை என்றாலும் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

            இவர் சமீபத்தில் இளைய தளபதி விஜய் ஜோசப்புடன் சேர்ந்து நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர் தற்போது வட்டம், மாளிகை மற்றும் பிசாசு-2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே 2014-ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் திகில் மற்றும் திரில்லர் கலந்து வெளியான பிசாசு படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்திற்கும் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

            இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா ஜெர்மியா படத்தில் கதைக்காக ஒரு சில காட்சிகளில் நிர்வாணமாக நடிக்கும் அவசியம் ஏற்பட்டதாகவும் அதற்கு ஆண்ட்ரியா ஒப்புக்கொண்டு நடித்து கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஏறக்குறைய 15 நிமிட காட்சிகள் இந்த படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரத்னகுமார் இயக்கிய ஆடை என்னும் படத்தில் அமலாபால் சில காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருப்பார். இந்த திரை படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். 

            இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்று தரவில்லை என்ற போதிலும் அமலாபால் நடித்த துணிச்சலான கதாபாத்திரம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து ஆண்ட்ரியா ஜெர்மியா இந்த திரைப்படத்தில் துணிவான காட்சிகளில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. 

            மிஸ்கின் இயக்கிய இப்படத்தில் ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சகாப்தம், படைவீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசை அமைகின்றார். இப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. 



Post a Comment

Previous Post Next Post