மகாபாரதத்தில் குந்தி தேவியின் வரலாறு
(History of Kunti Devi in Mahabharata)
வரலாற்றில் நடைபெற்ற ஒரு தனிச்சிறப்பு மிக்க கதையாய் மக்களால் பார்க்கப்படுவது மஹாபாரதம். இக்கதையில் மனிதன் ஒருவன் தனது ஐம்புலன்களையும் அடக்கி எவ்வாறு வாழ வேண்டும் என்பன முதலான பல்வேறு கருத்துக்களை விளக்கி கூறுவதாக இந்த கதையின் கரு அமைந்துள்ளது. இந்த கதையின் முக்கிய கதாபாத்திரமான குந்தி தேவியைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
குந்திதேவியின் பிறப்பும், இளமையும் (Birth of Kunti) :
கிருஷ்ணருடைய தந்தை வாசுதேவன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வாசுதேவனின் தங்கையும், யாதவ குல அரசருமான சூரசேனருக்கு மகளாகப் பிறப்பவர் தான் ப்ரீத்தா. இவர் பிறந்த பிறகு சூரசேனரின் உறவினரும் குந்த தேசத்தின் இளவரசருமான குந்தி போஜா அவர்களுக்கு தத்து கொடுக்கப்படுகிறார். இவர் குந்த அரசருக்கு தத்து கொடுக்கப்பட்ட பிறகே இவரது பெயர் குந்தி தேவி என மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக குழந்தையில்லாமல் தவித்துவரும் மகாராஜா குந்தி போஜா, குந்தி தேவியை வளர்ப்பதன் மூலம் அந்த ஏக்கத்தை தீர்த்து கொள்கிறார்.
இவ்வாறு குந்திபோஜா அரசரின் அரவணைப்பில் ஒரு ராணிக்குரிய அனைத்து அம்சங்களும் பெற்றவளாய் வளர்கிறாள் குந்திதேவி. ஒருநாள் துருவாச முனிவர் குந்திபோஜாவின் அரண்மனையில் வந்து சில காலம் தங்க நேரிடுகிறது. அப்போது குந்தி போஜாவை நாடி தன்னுடைய நிலைமையை விளக்குகிறார். துர்வாச முனிவரின் நிலையை புரிந்துகொண்ட குந்திபோஜா, அவருக்கு பணிவிடை செய்வதற்கு தன்னுடைய பணிப்பெண்களின் மேல் நம்பிக்கையில்லாமல் தன்னுடைய சொந்த மகளான குந்திதேவியை பணிவிடை செய்ய அனுப்புகிறார்.
துர்வாச முனிவரின் வரங்கள் :
துர்வாச முனிவருடன் தங்கி அவருடைய தேவைகளை பூர்த்தி செய்தும், அவரை தன்னுடைய சேவைகளால் மகிழ்வித்தும் வந்தார் குந்திதேவி. குந்திதேவியின் பொறுமையை சோதிக்க பல்வேறு சோதனைகளை ஏற்படுத்தினார் துர்வாச முனிவர். எனினும் முனிவர் மீது சிறிதும் கோபம் கொள்ளாமல் அனைத்து சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு துர்வாச முனிவரை மகிழ்வித்தார் குந்தி. இவ்வாறு சிறிது காலம் செல்ல, குந்தி தேவியின் அர்பணிப்பால் மகிழ்ந்த துர்வாச முனிவர் குந்தி தேவிக்கு ஒரு அரிய வரத்தை அளிக்கிறார். அதாவது "கன்னித்தன்மையை இழக்காமல் எந்த தேவரை நினைத்து குந்தி வழிபடுகிறாளோ, அந்த தேவரின் மூலம் அவருக்கு ஒரு குழந்தை கிடைக்கும்" என்பது வரமாகும். சிறு வயது முதலே விளையாட்டு பிள்ளையாக வளரும் குந்தி அந்த மந்திரம் குறித்து விளையாட்டாக கருதி மந்திரத்தை உபயோகிக்க எண்ணுகிறாள். யாரை நினைத்து வேண்டுவது என நினைத்து மேலே பார்க்க, பிரகாசமாக ஒளிக்கும் சூரிய தேவரின் நியாபகம் வரவே அவரை நினைத்து வேண்டுகிறாள் குந்தி. உடனே சூரிய தேவர் அவள் முன் தோன்றி, அவரிடம் கவச குண்டலத்துடன் கூடிய ஒரு குழந்தையை தருகிறார்.
உடனே குந்தி தேவி தன்னுடைய தவறை உணர்ந்து நான் இப்போது கல்யாணம் கூட ஆகாத கன்னிப்பெண். இந்த குழந்தையை தற்போது என்னால் வளக்க முடியாது என்றும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சூரிய தேவனிடம் மன்றாடுகிறாள். அனால் வரத்தை திரும்ப பெற இயலாத சூழ்நிலையை குந்தியிடம் விளக்கி, அந்த குழந்தையை வளர்க்குமாறு சூரிய தேவனால் நிர்ப்பந்திக்கப்படுகிறாள் குந்தி.இந்த குழந்தையை எவ்வாறு நான் குந்திபோஜா மன்னனிடம் அறிமுகம் செய்வது? மக்களிடம் நடந்தவற்றை எப்படி கூறி புரியவைப்பது? என வருந்தும் குந்தி தேவி, அந்தக் குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு அழகிய கூடையில் வைத்து கங்கை நதியில் விட்டு விடுகிறாள். இதனால் கோபம் கொள்ளும் சூரிய தேவன் அந்த குழந்தையை மறைமுகமாக காப்பாற்றி, அஸ்தினாபுரத்தில் வெகுநாட்களாக குழந்தையின்றி தவித்து வரும் அதிரதன் மற்றும் ராதா தம்பதிகளுக்கு கிடைக்க வழிவகை செய்கிறார்.
குந்திதேவியின் திருமண வாழ்வு (Kunti's Marriage):
குந்தி போஜா தன் வளர்ப்பு மகள் குந்திக்கு சுயம் வரம் ஒன்றை நிகழ்த்துகிறார். பல்வேறு நாட்டின் அரசர்களும் பங்குபெறும் பிரம்மாண்டமான சுயம்வரத்தில், அஸ்தினாபுரத்தின் மன்னரான பாண்டுவை தனது கணவராக தேர்ந்தெடுத்து அஸ்தினாபுரத்தின் ராணியாகிறார் குந்தி. அதன் பின் தனது ராஜ்ஜியம் விரிவடையவே மாத்ரா மற்றும் மார்டி என்ன இரண்டு பேரை திருமணம் செய்து குந்தியின் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் பாண்டு. சில நாட்களில் பாண்டுவால், குந்தி சமாதானப்படுத்தப்பட்டு மூவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். வேட்டையிடுவதில் திறமைபெற்ற பாண்டு ஒரு நாள் வேட்டையாட காட்டிற்கு செல்லும்போது அங்கு மானின் வேடத்தில் மனைவியுடன் புணர்தலில் ஈடுபட்டிருந்த கிண்டாமா என்ற ரிஷியை எதிர்பாராத விதமாக தாக்குகிறார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கும் ரிஷி, தான் இறக்கும் தருவாயில் "மனைவியுடன் உறவு கொண்டால் உனக்கு மரணம் நிகழும்" என பாண்டுவிற்கு சாபமிட்டுவிட்டு இறக்கிறார்.
பஞ்ச பாண்டவர்களின் பிறப்பு (Birth of Pandavas):
ரிஷியின் சாபத்தால் மனஉளைச்சலில் வருந்திய பாண்டு வாரிசு இல்லாமல் நாட்டிற்கு தலைவனாய் இருந்து என்ன பயன் என நாட்டையும், மக்களையும் துறந்து தனது மனைவிகளுடன் காட்டிற்கு சென்று விடுகிறார். அவரது மனைவிகளிடம் அவர் தனக்கு ஏற்பட்ட சாபத்தை பற்றி கூறவே, உடனே குந்திதேவி துர்வாச முனிவர் தனக்கு அளித்த வரங்களை பற்றி பாண்டுவிற்கு எடுத்துரைக்கிறாள். இதைக் கேட்டதும் மகிழ்ந்த பாண்டு தேவர்களை வேண்டி குழந்தையை பெற்றெடுக்குமாறு குந்தியிடம் கூறுகிறான் அதன்படியே எமதேவனை நினைத்து யுதிஸ்டிரரையும், வாயுதேவனை நினைத்து பீமனையும் மற்றும் இந்திர தேவனை நினைத்து அர்ஜுனையும் பெற்றெடுக்கிறாள் குந்தி.அதன் பின் மார்டியின் ஆசைக்கிணங்க அவளுக்கும் தனது மந்திரங்களை கற்பித்து அதன் மூலம் நகுலன் மற்றும் சகாதேவன் என்னும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கிறாள் மார்டி.
ஐந்து தனித்திறன் வாய்ந்த குழந்தைகளை பெற்றபின், தனது கவலைகள் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் பாண்டு. ஒரு கட்டத்தில் கிண்டாமாவின் சாபத்தை மறந்து பாண்டு மார்டியுடன் புணர்தலில் ஈடுபடும்போது இறக்க நேரிடுகிறது. பாண்டுவின் இழப்பை தாங்க முடியாத மார்டி மன அழுத்தத்தால் தனது உயிரையும் மாய்த்துக் கொள்கிறார். இதனால் 5 குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான் குந்தி. அப்போது சூரிய தேவனின் ஒரு குழந்தையை விளையாட்டுத் தனமாக கங்கை நதியில் விட்டதை நினைத்து மனம் வருந்துகிறாள்.
குருசேத்ர போரில் குந்தியின் முக்கியத்துவம் (Importance of Kunti in Kurukshetra War) :
பாண்டவர்கள் ஐவரும் வளர்ந்தபின் அவர்களை அஸ்தினாபுரத்திற்கு அழைத்து வருகிறாள் குந்தி. இதனால் அடுத்து யார் அஸ்தினாபுரத்தை ஆளவேண்டும் என்ற போட்டி கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே ஏற்படுகிறது. ஒரு பக்கம் துரியோதனனும் மற்றொரு புறம் யுதிஸ்டிரரும் அடுத்த அரசர் பதவிக்கு போட்டியிட்டார்கள். ஒரு பக்கம் திருதராஷ்டிரனின் நூறு மகன்களில் மூத்தவனான துரியோதனனும் மற்றொருபுறம் பாண்டவர்களின் மூத்தவரான யுதிஸ்டிரரும் அரசர் பதவிக்கு போட்டியிட்டார்கள். துரியோதனனே அடுத்த அரசர் என கௌரவர்கள் நினைக்க, சபையில் யுதிஸ்டிரரை அரசனாக பதவியேற்கும் படி அழைக்கிறார் திருதுராஸ்டிரர். இதனால் கோபம் கொண்ட துரியோதனன் தன் மாமா சகுனியுடன் இணைந்து பாண்டவர்களை ஒழிக்க காயை நகர்த்த துவங்குகிறான். இந்த நிகழ்வே குருச்சேத்திர போரின் திருப்பு முனையாக அமைகிறது.
குருசேத்ர போர் இறுதி கட்டத்தை எட்டும் தருவாயில் தனது மகன் கர்ணன் உயிரோடு இருக்கிறார் என்பதையும், அவர் கௌரவர்களுடன் சேர்ந்து போரிடுகிறார் என்பதையும் அறிகிறார் குந்தி. உடனே குந்தி, கர்ணனை சந்தித்து நடந்தவற்றை கூறி தனது மன்னிப்பை தெரிவிக்கிறாள். அத்துடன் பாண்டவர்கள் ஐவரும் உனது சகோதரர்கள் என்றும், பாண்டவர்கள் பக்கம் வந்து விடுமாறும் கர்ணனை நிர்பந்திக்கிறாள் குந்தி. அனால் பாண்டவர்கள் பக்கம் வரமறுத்த கர்ணன் என்ன தான் நீங்கள் தாயாக இருந்தாலும், நீங்கள் என்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டீர்கள். என்னை காப்பாற்றி எனக்கு வாழ்வு அளித்தவர்களுக்கு ஒருபோதும் என்னால் துரோகம் இளைக்க முடியாது என கூறுகிறான்.
இதனை அறிந்த கிருஷ்ணர், பாண்டவர்கள் வெற்றிபெற குந்தியை, கர்ணனிடம் வரங்களை கேட்க அனுப்புகிறார். இந்த சதி குறித்து சூரிய தேவன் முன்பே கர்ணனிற்கு எச்சரிக்கை செய்கிறார். எனினும் தனது தாயின் பாசத்தை மீற முடியாமல் "நான் பாண்டவர்கள் அத்தனை பேருடனும் சண்டையிட மாட்டேன் என்றும் அர்ஜுனனிடம் மட்டுமே போரிடுவேன்" எனவும் கூறுகிறான். அதோடு போரின் முடிவில் ஒன்று அர்ஜுனன் உயிருடன் இருப்பான் இல்லையெனில் நான் உயிருடன் இருப்பேன் என்று சூளுரைக்கிறான். இதனை கேட்ட குந்தி வருத்தத்துடன் திரும்புகிறாள்.
குந்திதேவியின் இறுதி வாழ்க்கை (Kunti's Death):
குருசேத்ர போரில் கிருஷ்ணனுடைய சூழ்ச்சியால் கர்ணன் அர்ஜுனனால் வீழ்த்தப்படுகிறார். கௌரவர்கள் அனைவரும் வீழ்த்தப்படுகின்றனர். போரில் பாண்டவர்கள் வெற்றிபெற அஸ்தினாபுரத்தின் அரசனாக யுதிஸ்டிரர் முடி சூட்டப்படுகிறார். அதன்பின் கர்ணன் இறந்த துயரத்தில் பாண்டவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்து வருகிறார் குந்தி. அதேநேரம் மற்றொருபுறம் தன்னுடைய நூறு மகன்களையும் குருச்சேத்திர போரில் பறிகொடுத்துவிட்டிருந்த திருதுராஸ்டிரர் நாட்டை விட்டுத் துறந்து காட்டில் தவ வாழ்க்கை வாழ முடிவு செய்கிறார். இவருடன் மனைவி காந்தாரியும் செல்ல, கர்ணனை இழந்த இழப்பை தாங்க முடியாமல் குந்தியும் உடன் செல்கிறாள். இமயமலையில் இரண்டு ஆண்டுகளாக தவத்தில் ஈடுபட்ட இவர்கள், அதன்பின் ஏற்பட்ட பெரிய காட்டுத் தீயினால் தங்களது உயிரைத் துறந்தனர்.