உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அவரது 232 ஆவது படமான விக்ரம் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துகொன்டே செல்கிறது. ஏனெனில் இப்படித்தில் பணியாற்றி வரும் கலைஞர்கள் பலரும் பல வெற்றிப் படங்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கியுள்ளனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் கமல்ஹாசன் , விஜய்சேதுபதி மற்றும் பாஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம்தான் விக்ரம். ஏற்கனவே 1986-ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன், சத்யராஜ் மற்றும் அம்பிகா நடிப்பில் வெளியான விக்ரம் படம் பெரும் வெற்றியை அவருக்கு பெற்று தந்தது. எனவே அப்படத்தின் கதைக்கருவை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படலாம் என பரவலாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த படத்தின் டைட்டில் டீஸர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த டீசரில் விஜய் சேதுபதி பேசிய "இந்த கதையில் ராமனும் நான் தான் ராவணனும் நான் தான்" என்னும் வசனம் அவருடைய கதாபாத்திரத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, இளைய தளபதி விஜயுடன் சேர்ந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் சிறு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து சக்கை போடு போட்டது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். எனினும் அவருக்கு நடிகர் விஜய்க்கு நிகரான முக்கியத்துவம் அவருடைய கதாபாத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் இயக்குனர்கள், வில்லன் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள். ஆனால் மாஸ்டர் படத்தை ஒரு மாறுபட்ட கோணத்தில் இயக்கியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த கதைக்கருவே படத்தின் வெற்றிக்கும் வித்திட்டது.
மேலும் இப்படத்தில் பாஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்த வேலைக்காரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதில் எந்த ஒரு மாஸ் கட்சிகளும் இல்லாமல் எதார்த்தமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். இவருடைய கதாபாத்திரம் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கபடுகிறது.
இப்படி நாளுக்கு நாள் படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போக தற்போது விக்ரம் படக்குழுவினர் மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். கைதி, KGF மற்றும் கபாலி போன்ற பல வெற்றிப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்-ஆக பணியாற்றிய அன்புமணி மற்றும் அறிவுமணி ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட உலகநாயகன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் வெளியிடப்படும் அதிகாரபூர்வமான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வருட இறுதிக்குள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
