Top 10 Strongest Mahabharata characters | மகாபாரதத்தில் தலைசிறந்த பத்து வீரர்கள்

மகாபாரதத்தில் தலைசிறந்த பத்து வீரர்கள் 

                                      (Top 10 Strongest Mahabharata characters)                                                    

            இன்று நாம் மகாபாரதத்தில் பங்குகொண்ட தலைசிறந்த 10 வீரர்களை பற்றி பார்க்கப் போகிறோம். குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்ட அனைவருமே தலைசிறந்த வீரர்கள் ஆவர். அவர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலைகளில் தனித்துவமான திறமை பெற்றிருந்தனர். தற்போது அவர்களின் மனவலிமை, உடல் வலிமை, தர்மம் மற்றும் சூழ்நிலைகளை கையாளும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் பிடித்திருக்கும் இடங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

 10. ஏகலைவன் 

            வில் வித்தையில் அர்ஜுனனை விட சிறந்து விளங்கிய ஏகலைவன் பத்தாவது இடத்தில உள்ளார். அஸ்தினாபுரத்திற்கு அருகில் உள்ள காட்டில் வேடுவனாகப் பிறந்தவன் ஏகலைவன். வேட்டையாடுவதில் தன் தந்தையைப் போல் ஆர்வம் கொண்ட இவன் வில் வித்தையில் ஆர்வம் காட்டுகிறான். அதன் காரணமாக குரு துரோணரிடம் வில் வித்தை கற்க எண்ணி அவரிடம் சென்று தன்னை சீடனாக ஏற்கும்படி கேட்கிறான். 

            ஆனால் ஏகலைவன் வேடுவ குலத்தைச் சார்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனை சீடனாக ஏற்க மறுக்கிறார் குரு துரோணர். இதனால் மனம் வருந்திய ஏகலைவன் துரோணரைப் போன்று சிலை ஒன்று செய்து அந்த சிலையை குருவாக பாவித்து பல ஆண்டுகள் வில் வித்தையை கடுமையாக கற்கிறான். ஒருமுறை ஏகலைவன் மானை வேட்டையாடும்போது ஒரு நாய் குறுக்கிடுகிறது. அப்போது அந்த நாய் கத்தாமல் இருக்க தனது கணைகளால் நாயின் வாயை தைக்கிறான். 

            அந்த நாய் துரோணரின் பயிற்சி கூடத்திற்கு செல்கிறது. அதன் வாயை கண்ட பாண்டவர்களும், கௌரவர்களும் ஆச்சர்யத்தில் வியக்கின்றனர். எப்படி ஒருவனால் நாயின் வாயை மட்டும் இவ்வளவு நேர்த்தியாக அம்புகளால் தைக்க முடியும்! என்று பொறாமை கொண்ட அர்ஜுனன், குரு துரோணரிடம் இது பற்றி கேட்கிறான். அதைக் கண்ட குருவும் வியக்கிறார். எனினும் இதைப் பற்றி வெளியில் காட்டிக்கொள்ளாமல் அந்த நாய் எந்த திசையிலிருந்து வந்தது என கேட்டு அந்த திசை நோக்கி செல்கிறார். அங்கு காட்டில் தனது சிலையை வைத்து ஒருவன் வில் பயிற்சியில் ஈடுபடுவதை காண்கிறார். 

            பிறகு அவனிடம் சென்று ஏகலைவனிடம் அந்த பக்கம் வந்த ஒரு நாயை அம்புகள் கொண்டு தைத்தது ஏகலைவன் தான் என்பதை உறுதி செய்கிறார். மேலும் ஏகலைவன், தான் தங்களையே குருவாக நினைத்து இவ்வளவு ஆண்டுகளாக வில் பயிற்சி மேற்கொண்டு வந்ததையும், தாங்கள் என்னை சீடனாக ஏற்க மறுத்ததையும் கூறுகிறான். உடனே துரோணர் அர்ஜுனனே சிறந்த வில்லலானாக இருக்க வேண்டும் என்று கருதி சூழ்ச்சி செய்து ஏகலைவனிடம் இன்று முதல் நீ என் சீடன் என்று கூறுகிறார். 

அதைக் கேட்டு ஏகலைவனும் அவன் தந்தையும் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றனர். உடனே துரோணர் இந்த குருவிற்காக என்ன தட்சணை கொடுக்கப் போகிறாய்? என்று கேட்கவே, அவரது தந்தை தாங்கள் எது வேண்டுமானாலும் கேளுங்கள்! நாங்கள் தருகிறோம்! என்று மகிழ்ச்சியில் துரோணருக்கு வாக்களிக்கிறார். உடனே துரோணர் சற்றும் இரக்கமின்றி ஏகலைவனின் வலது கை கட்டை விரலை தருமாறு கேட்கிறார். இதனைக் கேட்ட ஏகலைவனின் தந்தை தன் மகனின் நிலையை நினைத்து வருந்துகிறார். 

            ஏனேனில் கட்டை விரலின் உதவியின்றி ஒருவனால் அம்புகளை நேர்த்தியாக செலுத்த முடியாது. அனால் ஏகலைவனோ சற்றும் தயங்காமல் தனது கட்டை விரலை வெட்டி துரோணரின் காலடியில் சமர்பிக்கிறான். இதைக்கண்ட அர்ஜுனன் துரோணரின் கடுமையான செயலைக் கண்டு வருந்தினாலும், இனி வில் வித்தையில் தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்பதை நினைத்து கர்வம் கொள்கிறான். அதன்பிறகும் வில் வித்தையை கற்க முயன்றான். அனால் அர்ஜுனனுக்கு இணையாக அவனால் அம்புகளை தொடுக்க முடியவில்லை. 

9. சக்தியாகி மற்றும் கிருதவர்மா :

            மகாபாரதத்தில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்கள் சக்தியாகி மற்றும் கிருதவர்மா. குருச்சேத்திரப் போரில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெரும் போர் சேனையையே அழித்துள்ளனர். போரில் கர்ணன் மற்றும் அர்ஜுனன் போன்ற வரலாற்று சிறப்புமிக்க வீரர்களுடன் போரிட்டதால் இவர்களின் திறமை பற்றி பெரிதாக எவரும் பேசுவதில்லை. யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணர் மற்றும் பலராமர் ஆகியோரை அடுத்து மிகவும் பலம் பொருந்திய வீரர்கள் இவர்கள் இருவர்தான்.


             தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவரும் போரில் கலந்து கொள்ளக் கூடாது என கிருஷ்ணர் எடுத்த முடிவையும் மீறி தனக்கு வில்வித்தை கத்துக் கொடுத்த குருவான அர்ஜுனனுக்காக குருச்சேத்திர போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து போரிடுவேன் என்று கூறுகிறார் சக்தியாகி. அதன் விளைவாக சக்தியாகி பாண்டவர்களுக்கு ஆதரவாகவும், கிருதவர்மன் கௌரவர்களுக்கு ஆதரவாகவும் குருச்சேத்திர போரில் போரிடுகின்றனர். 

 குருசேத்திரப் போரின் பதினெட்டாவது நாள், பாண்டவர்களின் புத்திரர்களை இரவில் சூழ்ச்சி செய்து கொலை செய்ய அஸ்வத்தாமனுடன், கிருபாச்சாரியார் மற்றும் கிருதவர்மன் ஆகியோரும் உடன் செல்கின்றனர். இவர்கள் மூவரும் இணைந்துதான் பாண்டவர்களின் மகன்களையும், பாண்டவர்களின் ஒரு பெரும் சேனையையும் கொன்று குவிக்கின்றனர். 

            ஒரு நாள் கடற்கரையில் அமர்ந்து நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும்போது சக்தியாகி, கிருதவர்மாவைப் பார்த்து ஒரு கோழை போன்று இரவில் வந்து பாண்டவர்களின் மகன்களை அழித்துள்ளாயே! என்று சொல்லி அசிங்கப்படுத்துக்கிறார். அதனால் இரண்டு தரப்புக்கும் இடையே போர் ஏற்ப்பட்டு யாதவ குலமே அழிந்ததாக கூறப்படுகிறது. குருசேத்திரப் போர் முடிவடைந்த பிறகும் இவர்கள் இருவரும் சாகாமல் உயிருடன் இருந்திருக்கிறார்கள். 

8. அஸ்வத்தாமன் 

            அர்ஜுனன் மற்றும் கர்ணனுக்கு அடுத்து மிகச்சிறந்த வில்லாளனாக கருதப்படுபவர் அஸ்வத்தாமன். இவர் தனது தந்தையான குரு துரோணாச்சாரியாரிடமிருந்து அனைத்து கலைகளையும், பல தெய்வீக அஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் கோபப்படும்போது இவருடைய முழு பலம் வெளிப்படும். எனவே தான் இவர் சிவனின் ருத்ர அவதாரம் என்று அழைக்கப்படுகிறார். 

            குருசேத்திரப் போரின் பதினைந்தாம் நாள் தனது தந்தை பாண்டவர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார் என்று தெரிந்ததும் தனது ருத்ர தாண்டவத்தை போரில் காட்டியிருப்பார். சக்தி வாய்ந்த தனது நாராயண அஸ்திரத்தை பயன்படுத்தி பாண்டவர்களையும், பாண்டவர் சேனையையும் அழிக்க முயற்சிப்பார். ஒரு மாபெரும் சேனையையே தன்னுடையே அஸ்திரத்தைக் கொண்டு அழித்த பிறகு, கிருஷ்ணர் பாண்டவர்களின் ஆயுதங்களை அனைத்தையும் கீழே போட்டுவிட்டு அமைதியாக இருங்கள்! நாராயண அஸ்திரம் தானாக செயலிழந்து விடும் என்று கூறி அந்த அஸ்திரத்தை செயலிழக்க செய்வார். 

            துரியோதனனுக்கு சிறந்த நண்பனாக இருந்த இவர் துரியோதனனின் கடைசி ஆசையை நிறைவேற்ற பாண்டவர்களின் அனைத்து மகன்களையும் இரவில் சென்று சூழ்ச்சி செய்து கொன்று விடுவார். இவர் கிருஷ்ணரிடம் பெற்ற சாபத்தின் காரணமாக இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

7. கடோத்கஜன் 

            அடுத்து ஏழாவது இடத்தில இருப்பவர் பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்த அசுரகுழந்தையான கடோத்கஜன். அரக்கர்களுக்கே உரித்தான பல மாயாஜால வித்தைகளையும் , பல அஸ்திரங்களை தனது மாயாஜால சக்தியின் மூலம் விரைவில் செயலிழக்க செய்யும் சக்தி கொண்டவன். ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான வீரர்களை அழிக்கும் ஆற்றல் கொண்டவன். அர்ஜுனனை, கர்ணனின் இந்திர அஸ்திரமிடமிருந்து காக்கவே கிருஷ்ணரின் அறிவுரையின் படி கடோத்கஜன் போரில் கௌரவர்களை எதிர்த்து போரிடுவான்.

             அவனை யாராலும் தடுக்க முடியாத நிலை உருவாகிறது. அப்போது வேறுவழியின்றி தனது நண்பன் துரியோதனனை கடோத்கஜனிடமிருந்து காக்க, கர்ணன் தனது இந்திர அஸ்திரத்தைப் பயன்படுத்தி கடோத்கஜனை வீழ்த்துவான். தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்த கடோத்கஜன், தனது உடலை ஒரு பெரிய உருவமாக மாற்றி பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மேலே விழுந்து அவர்களை அழித்து விட்டு தான் உயிரை விட்டான். 

6. பீமன் மற்றும் துரியோதனன் 

            மகாபாரதத்தில் பீமன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவரும் கடா ஆயுதத்தை பயன்படுத்துவதில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். இயற்கையாகவே துரியோதனன் 100 பேரின் பலத்தையும், பீமன் பத்தாயிரம் யானை பலத்தையும் கொண்டிருந்தனர். அதற்கு காரணம் சிறுவயதில் துரியோதனன் பீமனை கொலை செய்ய முற்படும்போது, பீமன் தன் உடலில் பாய்ந்த நஞ்சால் வாசுகி என்னும் பாம்புகளின் தலைவனை அடைகிறான். அவன் வாயு தேவனின் புதல்வன் என்று தெரிந்ததும் அவனுக்கு பத்தாயிரம் யானை பலத்தினை வாசுகி அளிக்கிறார். 

            மேலும் இவர்கள் இருவரும் கடாயுதம் மட்டுமின்றி வில், வாள் பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்கினர். மேலும் துரியோதனின் பலத்தினைக் கண்டு வியந்த பலராமன் தனது தங்கை சுபத்திரையை துரியோதனனுக்கு மணமுடித்துக் கொடுக்க எண்ணியிருந்தான். அந்த அளவிற்கு துரியன் பலசாலியாக இருந்தான். மேலும் பீமனை தோற்கடிக்க வேண்டும் என்று 13 வருட கடும் பயிற்சியினை மேற்கொண்ட துரியோதனன், குருசேத்ர போரில் பீமனுக்கு எதிராக சரிக்கு சமமாக கடும் சண்டையிட்டு இறுதியில் உயிரிழந்தான்.

5. அபிமன்யு 

            அடுத்து ஐந்தாவது இடத்தில இருப்பவன் அர்ஜுனனுக்கும், சுபத்திரைக்கும் பிறந்த மாவீரன் அபிமன்யூ. இவன் தன் தாயின் கருவில் இருந்தபோதே சக்கர வியூகத்தை எப்படி உடைத்துக் கொண்டு உள்ளே செல்வது என்பதை கற்றவன். மேலும் அர்ஜுனன், கிருஷ்ணன் மற்றும் பலராமன் போன்ற வீரர்களிடமிருந்து பல்வேறு கலைகளை கற்றுத் தேர்ந்தவன். தனது 16-ஆம் வயதிலேயே குருச்சேத்திர போரில் கர்ணன் துரோணர் கிருபாச்சாரியார் , துரியோதனன் மற்றும் துச்சாதனன் போன்ற பல வீரர்களை தனி ஆளாக நின்று போரிட்டு அவர்களை தோல்வியின் விளிம்பில் கொண்டு சென்றவன். 

            எனினும் இவனிடம் போரிட்டு வெல்ல முடியாத கௌரவர்கள், சதி செய்து இறுதியில் துரியோதனன் , துச்சாதனன் , கர்ணன் துரோணாச்சாரியார் , மற்றும் கிருபாச்சாரியார் ஆகியோருக்கு நடுவில் நிராயுதபாணியாக நின்ற அபிமன்யு கர்ணனால் வீழ்த்தப்பட்டான். எனினும் போரில் போரில் துரியோதன், துச்சாதனன் ஆகியோரின் மகன்களை கொலை செய்து கௌரவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினான்.

4.துரோணர்

            நான்காவது இடத்தில இருப்பவர் குரு துரோணர். இவர் சிவபெருமானின் அவதாரமான பரசுராமரிடம் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்தவர். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் அனைத்து கலைகளையும் கற்பித்தவர். சிறந்த வீரர்களான அர்ஜுனன், அஸ்வத்தாமன்,  போன்ற வீரர்களை உருவாக்கியவர். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான வீரர்களை அழிக்கும் ஆற்றல் கொண்டவர். 

            இவர் குருச்சேத்திர போரில் கௌரவர்களுக்கு ஆதரவாக நின்று போரிட்டபோது, இவரின் தாக்குதலை தாங்க முடியாமல் பாண்டவர்கள் செய்வதறியாது தவித்தனர். துரோணரை நேரடியாக போர் புரிந்து வெல்ல முடியாது என உணர்ந்த கிருஷ்ணர் சூழ்ச்சி செய்து பாண்டவர்கள் மூலம் துரோணரை வீழ்த்தினார். 

இவர் செய்த மிகப் பெரிய தவறாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுவது :

  • அர்ஜுனனுக்கு தான் கொடுத்த வாக்கிற்காக ஏகலைவன் என்னும் வீரனின் வலது காய் கட்டை விரலை குரு தட்சணையாக பெற்றது. 
  • தனது ஒரே மகன் அஸ்வத்தாமன் நல்வழியில் செல்கிறானா? இல்லையா? என்று கவனிக்காமல் விட்டது. 
  • கௌரவர்கள் அதர்மத்தின் பக்கம் நின்று போர் புரிகிறார்கள் என்று தெரிந்தும் அவர்களுடன் சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்தது. 

3.அர்ஜுனன் 

            மகாபாரதத்தில் சிறந்த வில்லாளன் , அகிலம் போற்றும் மாவீரன், காண்டீபதாரி என பல பெயர்களால் அழைக்கப்படுபவன் அர்ஜுனன். இவன் குரு துரோணரிடம் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன்.  மேலும் பல தேவர்களிடமிருந்து பிரம்மாஸ்திரம் உள்ளிட்ட பல அஸ்திரங்களையும், சிவா பெருமானிடமிருந்து சக்தி வாய்ந்த பாசுபதா அஸ்திரத்தையும் பெற்றவன்.குருச்சேத்திர போரிலேயே சக்கர வியூகத்தை உடைத்து சென்று போர் புரிந்து வெளியே வரும் திறமை அர்ஜுனனுக்கும், கிரிஷ்ணருக்கும் மட்டுமே இருந்தது. 

            இவரது மகனான அபிமன்யுவும், இவரது பயிற்சியினால் வில் வித்தையில் சிறந்து விளங்கினான். அனால் சக்கர வியூகத்தை உடைத்து எப்படி வெளியே வருவது என்பதை அறியாததால் போரில் கௌரவர்களால் கொல்லப்பட்டான். வில் வித்தையில் தனக்கு நிகராக விளங்கிய கர்ணனை கிருஷ்ணரின் உதவியால் வீழ்த்தியவன். குருச்சேத்திர போர் மட்டுமால்லாமல் அதற்கு முன்பு நடந்த விராட போரிலும் தனித்து நின்று ஒட்டுமொத்த கௌரவர்களின் படையையும் வீழ்த்தி வெற்றி கண்டவன்.  

2.கர்ணன் 

            இரண்டாவது இடத்தில சூரிய புத்திரன் என்றழைக்கப்படும் கர்ணன் இருக்கிறான். பிறப்பிலேயே தன்னுடைய உடலில் கவசம் மற்றும் குண்டலத்துடன் பிறந்த வீரன் கர்ணன் ஆவான். எனினும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணாமாக அரச குடும்பத்தில் வளராமல் ஒரு தாழ்ந்த குடும்பத்தில் வளர நேரிட்டது. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவன் என திரௌபதி மற்றும் குரு துரோணரால் அவமதிக்கப்பட்டான். துரோணருடைய குருவான பரசுராமரிடம் அனைத்து கலைகளையும் கற்றான். மேலும் இந்திரன் உள்ளிட்ட தேவர்களிடமிருந்து பல சக்தி வாய்ந்த அஸ்திரங்களையும் பெற்றவன். குருசேத்திரப்போரில் துரியோதனன் கர்ணனின் வீரத்தை நம்பியே பாண்டவர்களை எதிர்த்தான். 

            போரில் பாண்டவர்களான யுதிர்ஷ்டன் , பீமன் நகுலன் மற்றும் சகாதேவன் என அனைவரையும் வீழ்த்தியவன். வில் வித்தையில் அர்ஜுனனுக்கு நிகராக சண்டையிடும் ஆற்றல் கொண்டவன். தன்னை தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் செல்வத்தை வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவன். அனால் குருச்சேத்திர போரில் கிருஷ்ணரின் சூழ்ச்சியாலும், பரசுராமரிடம் தான் முன்பு பெற்ற சாபத்தினாலும் அர்ஜுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டான்.

1.பீஷ்மர் 

            முதலிடத்தில் இருப்பவர் கங்கையின் மைந்தன் என்றழைக்கப்படும் பீஷ்மர் ஆவார். மகாபாரதத்திலேயே மிகச் சிறந்த பலசாலியாக அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர் பீஷ்மர். குரு பரசுராமரிடம் கலைகளை கற்ற இவர் குருவை மிஞ்சிய சீடனாக அவரையே எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டவர். தன தந்தையின் ஆசைக்காக தனது ஆசைகள் அனைத்தையும் துறந்து பிரம்மச்சரியத்தை தனது இறுதி நாள் வரை கடைபிடித்தவர்.

            தன்னுடைய தந்தையிடம் பெற்ற சாகா  வரத்தால் பல தலைமுறைகள் கடந்து 200 ஆண்டுகளாக அஸ்தினாபுரத்திற்கு சேவகனாக பணியாற்றியவர். குருச்சேத்திர போரில் முதல் பத்து நாட்களில் பாண்டவர்களின் பெரும் சேனையை அழித்தவர். குருச்சேத்திர போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணரையே தன்னுடைய தாக்குதல்களால் கோபமடையச் செய்தவர். எனினும் போரில் கிருஷ்ணரின் சூழ்ச்சியால் பாண்டவர்களால் கொல்லப்பட்டார். 


Google Translate in English

                  

TOP 10 MOST POWERFUL WARRIORS IN MAHABHARATA

            Today we are going to look at the top 10 warriors who made biggest impacts in the history of Mahabharata. All those who took part in the Crusades were said to be great warriors. Each of them had a unique talent in each of the arts. In this post we will look at the places they currently like based on their mental strength, physical strength, virtue and ability to handle situations.

 10. Ekalavya

            Ekalavya is called as better archer than Arjuna. Ekalavya was born a hunter in the forest near hastinapur.He was just as interested in hunting as his father, is interested in archery. He wished to learn archery arts from guru Drona. But Guru Drona refuses to accept Ekalavya as a disciple for the sole reason that he belongs to the Vedava clan. Thus repenting, Ekalavya makes an idol like Drona and uses the idol as a guru and learns the art of bowing hard for many years. Once a dog interrupts while he hunting a lone deer. Then he sews the dog's mouth with his claws to keep the dog from barking.

            That dog goes to Drona's Place. The Pandavas and Kauravas who saw its mouth were amazed. How can one just sew a dog's mouth so neatly with arrows! Envious of that, Arjuna asks Guru Drona about this. The Guru who saw it is also amazed. However without showing off about this the dog asks which direction it came from and goes in that direction. There he finds someone putting his idol in the woods and engaging in bow training.

            Then he goes to Ekalavya and confirms that it was Ekalavya who stitched a dog that came to that side with arrows. Ekalavya also says that he thought of himself as a guru and had been practicing archery for so many years and that they refused to accept me as a disciple. Immediately Drona manipulates that Arjuna should be the best villain and tells Ekalavya that from today you are my disciple.

            Ekalavya and his father are very happy to hear that. Then Drona asked them "for that what you will pay for me as guru thatchana"? then his father said "ask whatever You want! We give!". they happily promises to Drona. Immediately Drona mercilessly asks Ekalavya to give him his right thumb. On hearing this, Ekalavya's father regrets his son's condition.

            Because without the help of the right thumb one cannot direct the arrows neatly. But Ekalavya does not hesitate to cut off his thumb and submit to Drona's feet. Seeing this, Arjuna regrets Drona's harsh act, but still proud to think that there is no one better than him in archery. After that he tried to learn the trick of the bow. But he could not shoot arrows like Arjuna.

9. Satyaki and Kritavarma :

            Those in the ninth place in the Mahabharata are Satyaki and Kritavarma. Together they destroyed a large army in the Battle of Kurukshetra. No one talks much about their prowess as they fought with historically distinguished warriors like Karna and Arjuna in battle. They are the second strongest warriors after Krishna and Balarama of the Yadava clan. Satyaki says that he will fight with the Pandavas in the battle of Kurukshetra for his Guru Arjuna, who shouted at him in defiance of Krishna's decision that no one from his family should take part in the war. As a result Satyaki fought in support of the Pandavas and in support of the Kritavarma Kauravas in the Battle of Kurukshetra.

            On the eighteenth day of the Battle of Kurukshetra Ashwattaman along with Kripacharya and Kritavarma, go to assassinate the sons of the Pandavas at night. Together they kill the sons of the Pandavas and a large army of Pandavas. But Both survived the end of Kurukshetra. One day while sitting on the beach and drinking wine with friends, Satyaki came to visits Kritavarma and said "like a coward You destroyed the sons of the Pandavas! that is ugly. After that the war was started between the two sides and the Yadava clan was destroyed.  

8.  Ashwatthama

            Ashwatthama is considered to be the next best archer after Arjuna and Karna. He chose to learn all the arts and many divine astrology from his father Guru Dronacharya. His full strength is revealed when he is angry. That is why he is called the Rudra incarnation of Shiva. On the fifteenth day of the Battle of Kurukshetra he knew that his father had been killed by the intrigues of the Pandavas and would have shown his rudra tantra in battle. He will use his powerful Narayana arrow to try to destroy the Pandavas and the Pandava army. After destroying a huge army with his own arrow, Lord Krishna advices to put down all the weapons of the Pandavas and remain silent! by saying that the ashtra will automatically deactivate. He was Duryodhana's best friend and would go and kill all the sons of the Pandavas at night to fulfill Duryodhana's last wish. He is said to be still living as Chiranjeevi today due to the curse he received from Lord Krishna.

7. Ghatotkacha

            Next in seventh place is Ghatotkacha, a monster born to Bhima and Hidimbi. He has many magical tricks that belong to monsters and has the power to quickly deactivate many astras with his magical power. He has the power to destroy thousands of soldiers in a minute. During the Kurukshetra war, to protect Arjuna from Karna's Indra Astra Ghatotkacha was fighting alongside with pandavas as Krishna's advice. A situation develops in which no one can stop him. Then Karna will use his Indra Astra to defeat Ghatotkacha to save his friend Duryodhana from Ghatotkacha. Ghatotkacha, who knew he was going to die, turned his body into a giant figure and fell on top of tens of thousands of soldiers, destroying them and leaving them dead.

6. Bhima and Duryodhana

            In the Mahabharata, both Bhima and Duryodhana were great warriors in the use of the Kata weapon. Naturally Duryodhana had a strength of 100 men and Bhima had a strength of ten thousand elephants. The reason for this is that when Duryodhana tries to kill Bhima at a young age, Bhima reaches the head of the snake named Vasuki with the poison that fell on his body. When he finds out that he is the son of Vayu God, Vasuki gives him ten thousand elephant strength. Both of them excelled not only in sword but also in various arts like bow and sword. And Balarama, astonished at Duryodhana's strength, intended to marry his sister Subhadra to Duryodhana. After 13 years of hard training to defeat Bhima, Duryodhana fought a fierce battle against Bhima at the Battle of Kurukshetra and was eventually killed. 

5. Abhimanyu 

            Next in fifth place is Abhimanyu, the hero born to Arjuna and Subhadra. he learned how to break the wheel strategy and get inside while still in his mother’s womb. He also learned various arts from warriors like Arjuna, Krishna and Balarama. At the age of 16, in the Battle of Kurukshetra, Abhimanyu defeated many warriors such as Drona, Kirupacharya, Duryodhana and Dushasana and fought them to the brink of defeat.

            But the Kauravas, Realizing that it was difficult to fight and kill him honestly, the Kauravas killed him in violation of the morality of war. At that time he stood unarmed in the midst of Duryodhana, Tusshadhana, Karna Dronacharya, and Kirubacharya. However in the war he killed the sons of Duryodhana and Dushasana and caused great damage to the Kauravas.

4.Drona

            In fourth place is Guru Drona. He chose to learn all the arts from Parashurama, the incarnation of Lord Shiva. He taught all the arts to the Pandavas and Kauravas in the Mahabharata. He is the creator of great players like Arjuna and Ashwatthama etc. He also has the power to destroy thousands of soldiers at once. When he fought in support of the Kauravas in the Battle of Kurukshetra, the Pandavas were unable to withstand his attacks. Lord krishna knew that Drona could not be directly defeated by war. So the Pandavas maneuvered and killed him.

Drona's biggest mistakes was mentioned in the Mahabharata such as:

  • Guru Drona asked the right thumb of a warrior named Ekalaivan for his Promise for Arjuna.
  • Is his only son Ashwatthaman going well? Isn't it That went unnoticed.
  • Knowing that the Kauravas were fighting on the wrong side, yet he joined them and opposed the Pandavas. 

3.Arjunan

            Arjuna is known by many names as the best archer in the Mahabharata, the universally acclaimed hero, Kandipadari etc. Arjuna chose to learn all the arts from Guru Drona. He also received many Astras including the Brahmastra from many gods and a powerful Basupada Astra from Lord Shiva. His son Abhimanyu also excelled in archery due to his training. But he was killed by the Kauravas in battle for not knowing how to break the wheel strategy and get out. With the help of Krishna, Arjuna defeated Karna in Kurukshetra war. He stood alone not only in the Battle of Kurukshetra but also in the previous Virat War and defeated the entire army of Kauravas.

2.Karnan

            In the second place is Karna also known as Suryaputhra. Karna was born as a warrior with a shield and a kundalam on his body. However due to circumstantial circumstances he had to grow up in an inferior family instead of growing up in a royal family. He was insulted by Draupadi and Guru Drona as belonging to a lower caste. He learned all the arts from Drona's guru Parashurama. He also received many powerful Astras from the gods, including Indra. Relying on Karna's heroism, Duryodhana opposed the Pandavas in the Battle of Kurukshetra.

            He defeated the Pandavas Yudhishthira, Bhima, Nakula and Sahadeva in Kurukshetra battle. Also Possessing the ability to fight Arjuna in archery. He is the one who pours wealth without saying no to those who seek him. But in the battle of Kurukshetra he was overthrown by Arjuna's arrows due to Krishna's intrigue and the curse he had previously received from Parashurama and others.

1. Bhishmar

            In the first place is Bhishma, also known as Gangai Mainthan . Bhishma was the greatest scholar of all the arts in the Mahabharata. He learned the arts from Guru Parashurama and was successful in fighting against him as a disciple who surpassed the Guru. He renounced all his desires for the sake of his father and practiced celibacy until his last days. Bishma destroyed a large army of Pandavas in the first ten days of the Battle of Kurukshetra. Krishna, who was Arjuna's charioteer in the battle of Kurukshetra, was angered by his attacks. However in battle he was killed by the Pandavas by the intrigue of Krishna. 


1 Comments

  1. How to Make Money from Betting Odds to Make Money Online
    What are the best 1xbet korean online sports betting options? Find out which sportsbooks have the best deccasino welcome bonuses and free bets, or what หาเงินออนไลน์ is the most

    ReplyDelete
Previous Post Next Post