குக்கூ வித் கோமாளி சீசன்-3 புதிய அப்டேட் - டிக்டாக் புகழ் ஜிபி முத்துவை களம் இறக்குகிறது விஜய் தொலைக்காட்சி | Cuckoo With Clown Season-3 New Update | Vijay TV introduce Tiktok fame GP Muthu

            மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தனக்கென ஒரு தனிச்சிறப்பை கொண்டிருக்கும் ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளிலும் பல தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பு செய்துகொண்டு வருகிறது. திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள் மற்றும் நகைச்சுவை பொழுதுபோக்கு தொடர்கள் என வெவ்வேறு தொடர்களை ஒளிபரப்பி TRP மதிப்பீட்டில் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜோடி நம்பர் - 1 (Jodi no 1), காஃபி  வித் (டிடி Koffee with DD), குக்கூ வித் கோமாளி (Cooku with Comali), பிக் பாஸ் (Bigg Boss), கலக்க போவது யாரு போன்ற தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

            விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகிக்கொண்டு வரும் குக்கூ வித் கோமாளி என்னும் தொலைக்காட்சி தொடர் வெற்றிகரமாக அதன் இரண்டு பாகங்களை நிறைவு செய்தது. குக்கூ வித் கோமாளி தொடரின் இரண்டாம் பாகத்தில் கனி திரு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் ஷகீலா பேகம் , அஸ்வின் குமார், லட்சுமிகாந்தன், பாபா பாஸ்கர் மற்றும் பவித்ரா லட்சுமி போன்றோரும் அடுத்த இடங்களில் தேர்வாகினர். 

            இந்த தொடரின் இரண்டாம் பாகம் TRP மதிப்பீட்டில் பிரபல தொலைக்காட்சி தொடரான உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் தொடரையும் பின்னுக்கு தள்ளி விஜய் டிவி வரலாற்றில் பலராலும் பாராட்டப்படும் நகைச்சுவை கலந்த சமையல் தொடராக உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

            பெரும்பாலும் விஜய் தொலைகாட்சி தொடர்களில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கும் பலரும் திரையுலகில் பிற்காலத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக்கொள்வது ஒரு ட்ரெண்டாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன், ரைசா வில்சன் , ரோபோ ஷங்கர் மற்றும் பலர் விஜய் தொலைக்காட்சி தொடர்களில் தங்கள் பயணத்தை தொடக்கி தற்போது தமிழ் திரையுலகில் தங்களுக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்டனர். குக்கூ வித் கோமாளி தொடரின் மூலம் கோமாளிகளாக பிரபலாமான புகழ் மற்றும் பாலா இருவரும் தற்போது அதிக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

            இவ்வாறாக குக்கூ வித் கோமாளியின் இரண்டு பாகங்களை நிறைவு செய்த விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது மூன்றாவது பாகத்தை ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொடரில் தமிழ்நாட்டில் டிக்டாக்-ல்(tiktok) தொடங்கி யு டியூப் (youtube) மூலம் தன்னுடைய நகைச்சுவையான பேச்சு திறமையால் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் ஜிபி முத்துவை களம் இருக்க விஜய் தொலைகாட்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

            ஜிபி முத்து பற்றி கூறவேண்டும் என்றால் டிக்டாக்-ல் ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய விடீயோக்கள் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் அவை அனைத்தையும் தனது வெகுளித் தனமான நகைச்சுவை கலந்த நடிப்பாலும், பேச்சு திறமையாலும் நேர்மறையாக மாற்றி வரும் இவர் தற்போது பல்வேறு தொலைக்காட்சி பிரபலங்களாலும் பாராட்டப்பட்டு வருபவர். இவரை வைத்து TRP மதிப்பீட்டை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என விஜய் தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

            மெலும் குக்கூ வித் கோமாளியின் மூன்றாவது பாகத்தில் கடந்த இரண்டாவது பக்கத்தில் கோமாளிகளாக நடித்த அனைவரும் இடமொருவார்கள் என்றும், இந்த தொடரின் ஒளிபரப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ஆரம்பமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. 

Post a Comment

Previous Post Next Post