தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா அக்கினேனி. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "ஏ மாய சேஷாவே" என்னும் தெலுகு படம் மூலம் அறிமுகமான இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா மற்றும் பானா காத்தாடி என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் தொடக்கத்தில் இவருடைய படங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும் இவர் நடித்த முதல் படம் "ஏ மாய சேஷாவே" என்னும் படத்திக்காக பிலிம்பேர் (filmfare) விருதில் இவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.
பிறகு இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் துவங்கிய இவர் ஈகா, நீதானே என் பொன்வசந்தம் மற்றும் அ ஆ போன்ற படங்களுக்காக பிலிம்பேர் (filmfare) விருதையும் தட்டிச்சென்றார். நாகசைதன்யா என்னும் தெலுகு நடிகரை காதலித்து வந்த இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பெரும்பாலும் திரையுலகில் நடிகையாக வளம் வருபவர்கள் தங்களின் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் ஆர்வம் செலுத்த மாட்டார்கள். மேலும் சில நடிகைகள் எங்கே திருமணம் செய்துகொண்டால் நடிப்பு தடைபடுமோ என்று திருமணம் செய்யாமலே 30 வயதை தாண்டியும் நடித்து கொண்டிருக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு சிறிது நாட்கள் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த சமந்தா, இரும்புத்திரை மற்றும் சீமராஜா போன்ற படங்களின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்தார். ராஜ் & டி.கே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி மற்றும் இவருடன் பலர் நடிக்க தற்போது வெளியான பேமிலிமேன்-2 (Family man-2) என்னும் தொலைக்காட்சி தொடர் உலகம் முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தொடரில் இவர் ராஜி என்னும் கதாபாத்திரத்தில் மிகவும் துணிச்சலான இலங்கை தமிழ் பெண்ணாக நடித்திருப்பார். இந்த தொடரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருப்பதால் சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பேசும் பொருளாக பார்க்கப்பட்ட போதிலும் இவருடைய நடிப்பிற்கு திரையுலகில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சமந்தா சகுந்தலம் என்னும் வரலாற்று படத்தில் நடிப்பது குறித்த சில செய்திகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சகுந்தலம் கதாபாத்திரத்திற்கு பூஜா ஹெட்ஜ், மற்றும் அனுஷ்கா ஷெட்டி போன்ற முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சமந்தாவை உறுதி படுத்தினர் படக்குழு. இது குறித்து சமந்தா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கடந்த பத்து வருடங்களாக என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே தன்னுடைய கனவாக இருந்ததாகவும் தற்போது அந்த கனவு நிறைவேறி இருப்பதாகவும் இந்த படத்திற்கு என்னால் முடிந்தவரை 100 சதவீதம் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் இவ்வளவு தகவல்கள் நிறைந்த கதையை நான் இதுவரை கேட்டதே இல்லை என்றும் படம் குறித்து அனைத்து தகவல்களையும் இயக்குனர் குணசேகரன் விரல் நுனியில் வைத்திருப்பதாகவும், இந்த மிகப் பெரும் புராண கதையில் நானும் ஒரு பகுதியாக இருப்பத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரலாற்று புராண கதையை கொண்டு எடுக்கப்படுவதால் இப்படத்தின் கருத்துக்கள் மக்களால் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு, இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ராமாயணம் மற்றும் ருத்ரமாதேவி போன்ற புராண கதைகளை இயக்கிய குணசேகர் இப்படத்தை இயக்குகிறார். சமந்தா அக்கினேனி, தேவ் மோகன், அதிதி பாலன் மற்றும் பலர் நடிக்க மணி சர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் வெளியிடப்படும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
