கடந்த மார்ச் மதம் பரவத் தொடங்கிய கொரோனவால் மக்கள் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பொது முடக்கத்தால் அவஸ்தை பட்டு வருகின்றனர். கொரோனோவால் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் பொது முடக்கத்தால் வீட்டிலேயே முடங்கி கிடப்பதன் மூலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிலர் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்கும் செல்கின்றனர். அந்த வகையில் தோனி படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் கடந்த ஜூன் மதம் தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளதை தொடர்ந்து திரையுலகில் பலரும் தாங்கள் சந்தித்த மனஅழுத்தம் தொடர்பான கருத்துக்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டுக்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு என்னும் படம் மூலம் அறிமுகம் ஆகிய விஷ்ணு விஷால் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் இவருக்கு கடந்த சில ஆண்டுகள் மிகவும் கசப்பான ஆண்டுகளாகவே அமைந்துள்ளது. திரையுலகிற்கு காலடி எடுத்து வைப்பதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த இவர் தனது கல்லூரி தோழியும் நடிகர் கே.நாதராஜரின் மகளுமான ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து 2010- ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இருவரும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் பிரபல தேசிய பூப்பந்து வீராங்கனை ஜ்வாலா குட்டா என்பவரை காதலித்து வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் பொதுவாக அதிக கருத்துக்களை வெளியிடும் இவர் சமீபத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவருடன் நடித்த நகைச்சுவை நடிகர் சூரி இவர் மீது அளித்த புகாரின் பெயரில் சூரி மீது குற்றச்சாட்டுகளை விதித்து வருகிறார்.
இவ்வாறு முதல் மனைவி விவாகரத்து, இரண்டாவது திருமணம் மற்றும் சூரியுடன் நடந்த மோதல் போன்ற காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டு வந்த இவர் தற்போது கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்டதை வலப்பக்கத்தில் பகிர்ந்ததுடன் "Train hard... Recover hard...!" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கப்பிங் சிகிச்சை என்பது மக்கள் தங்களை இளமையாக வைத்துக் கொள்வதற்காகவும் மேலும் உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்காகவும் சமீக காலமாக பலராலும் நாடப்படும் ஒரு பண்டைய கால சீன சிகிச்சை முறை ஆகும். கண்ணாடி கோப்பைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட தோலின் மேல் வைத்து அதற்குள் வெப்பத்தை பயன்படுத்தியோ அல்லது உறிஞ்சுதல் மூலமாகவோ ஒரு வளிமண்டல அழுத்தத்தை ஏற்படுத்துவதே இந்த சிகிச்சையாகும்.
ஹாலிவுட் பிரபலங்களான ஜெனிபர் அனிஸ்டன், விக்டோரியா பெக்காம், ஃப்ரீடா பிண்டோ, க்வினெத் பேல்ட்ரோ ஆகியோரும் இந்த சிகிச்சையை நாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
