உலக அளவில் சமூக வலைத்தளங்களில் Twitter வலைத்தளம் Facebook மற்றும் Instagram போன்ற வலைத்தளங்களைக் காட்டிலும் பிரபலங்களால் அதிகம் செய்திகள் பகிரப்படும் வலைத்தளமாக இருந்துவருகிறது. ஒரு காலத்தில் பிரபலங்களால் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுவதாக இருந்த இந்த Twitter வலைத்தளம் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றே கூறலாம். சில நாட்களுக்கு முன் இந்திய அரசின் கட்டுப்பாடு விதிகளை கடைபிடிக்குமாறு Twitter நிறுவனத்திற்கும் இந்திய அரசிற்கும் ஒரு வார்த்தை போர் நடந்து தற்போது Twitter கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் Twitter-ஆல் வெளியிடப்பட்ட Twitter space என்னும் வசதி கடந்த சில நாட்களாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது என்றே கூறலாம். Clubhouse போலவே ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு அதில் பேச்சாளர்களால் அவர்களுடைய குழுவில் உள்ளவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். தற்போது கொரோனா இரட்ணடாம் அலையின் தாக்கம் காரணமாக அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அரசு கட்டுப்பாடு விதித்திருக்கும் நிலையில் பல்வேறு திரைத்துறை சார்ந்த பிரபலங்களும் இந்த Twitter space வசதியை பயன்படுத்தி கருத்துக்களை அவர்களுடடைய ரசிகர்களுடன் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் 22 நடிகர் விஜய் (Vijay) அவர்களின் 47- ஆவது பிறந்தநாளன்று விஜய் தொலைகாட்சியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்ய தர்ஷினி(DD)அவர்களால் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றிருந்தது.
அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த குக்கூ வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சிவாங்கி கிருஷ்ணகுமார் அவர்கள் அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திக்கொண்டார் என்றே கூறலாம். சமூக வலைத்தளமான Instagram மற்றும் Twitter போன்ற வலை தளங்களில் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடுபவர் நடிகை சிவாங்கி கிருஷ்ணகுமார். தற்போது இவரது ரசிகர்கள் இவரை Twitter space-ல் கலந்துரையாட அழைத்திருக்கின்றனர்.
அதற்கு அவர் "உங்க போனில் சார்ஜ் இருக்கு என் போனில் சார்ஜ் இல்லையே" என அவருக்கே உரிய வெகுளியான பாணியில் ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். மேலும் இன்னொரு ரசிகர் "Twitter space இல்லைனா கூட பரவால்ல Q&A ஆவது வாங்க செல்லம்மா" என்று கேட்டதற்கு "yes yes very soon" என்று cool-ஆக கூறியுள்ளார். இந்த Tweet தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கூடிய விரைவில் சிவாங்கியின் உரையாடலை Twitter space-ல் எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
