இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன் முதலில் Milan Luthria இயக்கத்தில் பிரபல நடிகை "சில்க் ஸ்மிதா" அவர்களின் வாழ்க்கை வரலாறு "The Dirty Picture" என்ற தலைப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதொடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக சாதனையும் படைத்தது. மேலும் இந்தப் படத்தில் சில்க் வேடத்தில் நடித்ததற்காக நடிகை வித்யா பாலன் அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களும் இந்த பாணியை பின்பற்ற தொடங்கினர்.
அதோடு இந்திய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. அந்த வகையில் எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரி கோம் மற்றும் மில்கா சிங்க் போன்ற விளையாட்டு வீரர்களின் படங்களும் வெளிவந்து நல்ல வெற்றியைக் கண்டன. இந்த யுத்தியை தென்னிந்தியாவிலும் இயக்குனர்கள் பயன்படுத்தி படங்களை இயக்கத் தொடங்கினர். அந்த வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு Nag Ashwin இயக்கத்தில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு "மகாநதி" என வெளியிடப்பட்டு மக்களிடம் வெற்றியும் கண்டது.
தற்போது தமிழ் திரையுலகில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறும் "தலைவி" என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்பபடத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. மதராசபட்டினம், தெய்வதிருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் இப்படத்தை இயக்க கங்கனா ரணாவத் ஜெயலலிதா அம்மையார் கதாபாத்திரத்திலும் மற்றும் அரவிந்த்சாமி திரு.எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
மேலும் நாசர் மறைந்த முன்னால் முதல்வர் திரு.மு.கருணாநிதி கதாபாத்திரத்திலும், வி.கே.சசிகலா கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணாவும் மற்றும் வி.என்.ஜானகி ராமசந்திரன் கதாபாத்திரத்தில் நடிகை மதுபாலாவும் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு தணிக்கைக்குழு "U" சான்றிதழ் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து படம் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் தமிழ் மக்களால் தல தோனிக்கு அடுத்தபடியாக சின்ன தல என்று மக்களால் கெத்தாக அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரெய்னாவிடம் "உங்கள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் எந்த நடிகர் நடிக்க வேண்டும்" என கேட்டதற்கு அவர் "தமிழ் சினிமாவில் என்னோட favourite hero எப்போதும் சூர்யா தான் அவர் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்" என கூறியுள்ளார். இதனால் சுரேஷ் ரெய்னா பயோபிக்-இல் சூர்யா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் அவரது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
Tags:
cinema news
