இந்தியாவின் சிறந்த பத்து படங்களை வெளியிட்ட IMDB இணையத்தளம் - விஜய் நடித்த மாஸ்டர் படம் முதலிடம் | IMDB website that released the top ten films of India | Vijay"s Master movie topped the list

            இந்த ஆண்டின் சிறந்த இந்திய படங்களின் பட்டியலை IMDB இணையத்தளம் தற்போது வெளியிட்டுள்ளது. திரைத்துறையை பொறுத்த வரை ஒரு படம் வெளியிடப்பட்டால் அந்த படத்தின் விமர்சனத்தை அறிந்த பின்னரே திரையரங்கிற்கு சென்று பார்க்கும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. அந்த வகையில் IMDB கடந்த 30 வருடங்களாக உலக திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள், ட்ரைலர் மற்றும் பல சினிமா குறித்த தகவல்களையும் வழங்கி வருகிறது. மேலும் இந்த தளத்தில் வெளியிடப்படும் மதிப்பீடுகள் அனைத்தும் IMDB-யில் கருத்துக்களை அளிக்கும் பயனர்களை கொண்டே மதிப்பிடப்படுகிறது.

            தற்போது பிரபலமான 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த 5 படங்கள் இடம்பெற்றுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் முதல் இடத்தையும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் ஆறாவது இடத்தையும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2 நான்காவது இடத்தையும் மற்றும் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த வக்கீல் சாப் திரைப்படம் ஏழாவது இடத்தையும், கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ரவி தேஜா மற்றும் ஸ்ருதி ஹசன் நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ஒன்பதாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

மாஸ்டர் - 1

            கோலிவுட் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த படியாக பாக்ஸ் ஆஃபிஸில் சாதனைகளை படைத்துக்கொண்டிருப்பவர் இளையதளபதி விஜய். இவர் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர். இவர் நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆஃபிஸில் ஏறக்குறைய 250 கொடியை வசூலித்தது. 

            இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருந்தது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் கல்லூரியில் ஆல்கஹால் பேராசிரியராக நடிக்கும் விஜய் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் கைதிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்துடன் மோதுவதை சண்டை மற்றும் காமெடி கலந்து மக்களுக்கு அளித்திருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தில் காட்சிகள் மட்டுமில்லாமல் அனைத்து பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

திரிஷ்யம் 2 - 4

      மலையாள பிரபல நடிகர் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் திரிஷ்யம்-2 . இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்க அணில் ஜான்சன் இசை அமைக்க அந்தோணி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இப்படத்தில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அணில் போன்ற நடிகர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மனிதன் காவல் துறையிடமிருந்து குற்றத்தை மறைக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கிறான் என்பதை காமெடி மற்றும் திரில்லர் கலந்து சொல்லி இருப்பார் இயக்குனர் ஜீத்து ஜோசப். 

            இப்படத்தின் முதல் பாகம் திரிஷ்யம் 2013-ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வசூல் சாதனை படைத்ததை தொடர்ந்து இப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தின் மலையாள வெற்றியை தொடர்ந்து தமிழ் மொழியிலும் பாபநாசம் என்னும் பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டு இருந்தனர். உலகநாயகன் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் போன்றோர் நடித்திருக்க 2015-இல் வெளியான  இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கர்ணன் - 6

            மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். இப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் லால், நடராஜன் சுப்பிரமணியம், யோகிபாபு மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கர்ணன் திரைப்படத்தில் மக்களின் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடும் ஒரு சுயநலமற்ற இளைஞனாக நடித்திருப்பார் தனுஷ். ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் என்னும் திரைப்படம் இதே மாதிரியான கதைக்கருவை கொண்டிருந்து மக்களிடம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

வக்கீல் சாப் - 7

            டோலிவுட் திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் வக்கீல் சாப். தில் ராஜு தயாரிக்க எஸ் தமன் இசை அமைக்க வேணு ஸ்ரீராம் இப்படத்தை இயக்கி இருந்தார். மேலும் நிவேதா தாமஸ், அஞ்சலி, அனன்யா நானல்லா, பிரகாஷ்ராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் பிங்க் என்னும் பாலிவுட் படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் டோலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் மாற்றம் செய்து வெளியிட்டிருந்தனர். வாழ்க்கையை சந்தோசமாக வாழ நினைக்கும் மூன்று பெண்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள, அவர்கள் வக்கீல் பவன் கல்யாண் உதவியால் எப்படி அதை எதிர்கொள்கிறார்கள் என்ற கதைக்கருவை மையமாக கொண்டு இத்திரைப்படம்  எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சுமார் 137 கோடி என கூறப்படுகிறது. 

Post a Comment

Previous Post Next Post