கோப்ரா படத்தின் புதிய அப்டேட் - ட்விட்டரில் அஜய் ஞானமுத்து வெளியிட்ட விக்ரமின் புதிய தோற்றம் இணையத்தளத்தில் ட்ரெண்டிங் | cobra movie new update

            தமிழ் சினிமாவில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெயர் போனவர் நடிகர் விக்ரம். 1990-ஆம் ஆண்டு தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை நடித்துத் தந்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த சேது, சாமி, பிதாமகன், அந்நியன், தெய்வ திருமகள், போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்திற்கு கொண்டு சென்றது. இப்படங்களில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகர் விருதையும் , பிதாமகன் படத்திற்க்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். 

            இவருடைய தனித்திறன் என்னவென்றால் இவர் ஒரு தோற்றத்தை ஏற்று நடித்தால் அந்த படத்தில் அவரை விட வேறு எவர் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்காது என்ற பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி விடுவார். படத்திற்காக எடையை குறைப்பதிலும் , கூடுவதிலும் மற்றும் தோற்றத்தை மாற்றி நடிப்பதிலும் இவருக்கு ஈடு இணை வேறு எவரும் இல்லை என்றே  சொல்லலாம்.

            இவரது வித்யாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திய இவர் தற்போது லலித் குமார் தயாரிப்பில் அஜய்  ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்னும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் இவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் மற்றும் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் மேல் மக்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துகொன்டே செல்கிறது.

            ஏனெனில் இப்படத்தின் இயக்குனர் அஜய் நாகமுத்து த்ரில்லர் மற்றும் திகில் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் இயக்கிய டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தை கொண்டிருந்து மக்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றிருந்தது. தற்போது இயக்கும் கோப்ரா படத்தின் ட்ரைலரில் விக்ரம் மாறுபட்ட தோற்றங்களில் வருவது மக்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

            ஏனெனில் இவர் அம்பி, ரெமோ மற்றும் அந்நியன் என ஷங்கர் இயக்கத்தில் நடித்த அந்நியன் திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மேலும் இந்த படத்தின் ட்ரைலரில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதன் பேசும் "நம்பர்ஸ்அ  வச்சு தான விளையாட்றான், I'll give him more numbers to play this time" என்னும் வசனங்கள் அவரின் கதாபாத்திரரத்தின் மேலுள்ள ஈர்ப்பை மக்களிடம் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

            இப்படி நாளுக்கு நாள் படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தற்போது படக்குழு ஒரு வயதான பெரியவர் வேடத்தில் நடிகர் விக்ரம் தன்னுடைய எடையை அதிகரித்து பெரியவர் போல் இருப்பது போன்ற படத்தை இயக்குனர்  அஜய்  ஞானமுத்து தன்னுடைய ட்விட்டர் வலயத்தளத்தில் பகிர்ந்துள்ளார் . மேலும் இப்படத்தில் நிறைய வேடங்களில் விக்ரம் நடிக்கிறார் போன்ற செய்திகளும் வெளிவந்துள்ளது. இப்படம் வெளியாகும் தேதி இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகலாம் என்று தெரிகிறது.

Post a Comment

Previous Post Next Post