ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்கு உதவிவரும் ராசி கண்ணா : மக்களை உதவ முன்வருமாறு வேண்டுகோள் | Raashi Khanna who helps people suffering in curfew

            உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு தனது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களும், பல நிதிஉதவி நிறுவனங்களும் முன்வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், சோனு சூட் மற்றும் பலர் லட்சக்கணக்கில் நிவாரண தொகை அளித்து உதவி வருகின்றனர்.

            மேலும் பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவை திரட்டி மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் சிறிது நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சேர்ந்து ஒரு பெரும் தொகையை திரட்டி மக்களுக்கு உதவினார். 

            தமிழ் சினிமாவில் சங்கத்தமிழன், அடங்கமறு, இமைக்காநொடிகள் மற்றும் அயோக்யா போன்ற படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் ராசி கண்ணா. சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கொரோனாவால் உடமைகளை இழந்து தவிப்பவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போன்றவற்றோருக்கு சமூக வலைத்தளம் மூலம் Rotibank என்னும் அமைப்பின் உதவியுடன் பல்வேறு ஏழை குடும்பங்களுக்கு உதவி வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

            மேலும் இது குறித்து அவர் கூறுகையில், கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு குடும்பங்கள் வேலையின்றி பசியால் தவிப்பதாகவும் , இப்பெரும் தொற்றின் காரணமாக பசியின் கொடுமை அதிகரித்துள்ளதாகவும், நான் என்னுடைய தனிப்பட்ட முயற்சியால் என்னால் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கிறேன் என்றும், தற்போது நீங்களும் உதவ வேண்டிய தருணம் வந்து விட்டது, உங்களால் ஆயிரம் பேருக்கு உதவ முடியவில்லை என்றாலும் உங்களால் முடிந்த ஒருவருக்கு உதவி செயுங்கள் என்று தனது உருக்கமான கோரிக்கையை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

            மேலும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் Rotibank அமைப்பு மூலம் ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் , நீங்கள் அளித்த உதவியின் மூலம் Rotibank அமைப்பு  ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளிக்க உதவியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Post a Comment

Previous Post Next Post