web series-க்கு படை எடுக்கும் தமிழ் நடிகைகள் : கோடிகளை சம்பளமாக வாரி வழங்கும் web series தயாரிப்பாளர்கள் | Tamil actresses who prefers web series over cinima industry

            வெளிநாடுகளில் தொடங்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வலைதொடர் (webseries) மோகம் தற்போது இந்திய மக்களையும் பெரிதும் ஈர்த்துள்ளது என்றே கூறலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய திரைப்பட நடிகர்கள் நடித்து நூற்றுக்கும் மேற்பட்ட வலை தொடர்கள் வெளியாகி மக்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்த தொடர்கள் பெரும்பாலும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்படுவதில்லை. அமேசான் பிரைம் (amazon prime) , நெட்பிளிஸ் (Netflix) , மற்றும் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற தனியார் நிறுவனங்கள் தங்களது இணையத்தளத்தில் வெளியிடுகின்றனர். மாத சந்தா முறையில் மக்கள் அதை தங்கள் விருப்பப்படி இணையத்தளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

            வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு உலக மக்களிடம் இன்றளவும் பெரும் வரவேற்பை பெற்றுவரும் Breaking Bad, Game of Thrones , The Boys, The Walking Dead,  Dark, The Vampire Diaries  மற்றும் Money Heist போன்ற தொடர்களை தொடர்ந்து இந்தியாவிலும் இதே பாணியை பின்பற்றிய இந்திய இயக்குனர்கள் அதனை இந்திய பாணியில் மக்களுக்கு ஏற்றவாறு இயக்கி, வெளியிட்டு அதில்  வெற்றியும் கண்டனர். அந்த வகையில் இந்தியாவில் வெளியிடப்பட்ட Made in Heaven, Mirzapur, Sacred Games, The Family Man, Special Ops மற்றும் F.L.A.M.E.S போன்ற வலை தொடர்கள் இன்றளவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

            சமீபத்தில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா அக்கினேனி மற்றும் பிரியாமணி ஆகியோர் நடிப்பில் ராஜ் & டி .கே. இயக்கத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் வலைத்தொடர்  The Family Man 2. இத்தொடர் வெளியான நாள்முதல் இன்றுவரை சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் இந்த தொடரில் ராஜி என்னும் கதாபாத்திரத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்த சமந்தாவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.  

            பொதுவாக திரைப்படங்களில் நடிக்க ஒன்று முதல் இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா இந்த வலை தொடரில் நடித்ததற்காக 4 கொடியை சம்பள தொகையாக வாங்கியுள்ளார். மேலும் இந்த வலைத்தொடரின் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்த வலைத்தொடரில் இவர் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் அந்த தொடரில் இவரது சம்பளம் 8 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

           சமந்தாவின் வெற்றியை தொடர்ந்து வலை தொடரில் நடித்தால் அதிக தொகையை சம்பளமாகப் பெறலாம் என்ற போக்கு திரையுலகில் பல்வேறு நடிகைகளிடம் எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளான திரிஷா, அனுஷ்கா ஷெட்டி, ஹன்ஷிகா மோத்வவாணி மற்றும் சுருதிஹாசன் போன்றோரும் வலை தொடரில் நடிப்பதற்காக கதைகளை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே தமன்னா நடிப்பில் வெளிவந்த நவம்பர் ஸ்டோரி (November Story) , ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான குயின் (Queen), ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியான ட்ரிப்பிள்ஸ் (Triples), மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான (Breathe) போன்ற தொடர்கள் தமிழில் வெளியாகி சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post