தமிழக மக்களால் "தல" என கெத்தாக அழைக்கப்படுபவர் பிரபல தமிழ் நடிகர் அஜித்குமார். தமிழ்நாட்டில் இவரைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். ஏனெனில் தமிழ் திரையுலகில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு ஜாம்பவானாக வளம் வரும் இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடுப்புகள் எஞ்சியுள்ள நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக வெளிநாடு செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர் படக்குழு.இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துகொன்டே செல்லும் நிலையில் தற்போது அஜித் காரில் செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு பிரபு கணேசன் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் பரட்வாஜ் இசையமைப்பில் அஜித்குமார், பிரபு, சமீரா ரெட்டி, பாவனா, சுரேஷ் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் அசல்.
இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்ற போதிலும், தல அஜித் ஏற்று நடித்த மாறுபட்ட காதாபாத்திரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படத்தின் ஏராளமான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருந்தன. படப்பிடிப்பின் பொது நடிகர் அஜித் குமார் இயக்குனர் சரணுடன் விலையுர்ந்த சொகுசு காரில் ஜாலியாக வளம் வருவது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
Tags:
photos
