தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் மத்தியில் தனக்கென தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் நடிகர் சூர்யா (surya sivakumar). படத்திக்காக எடையை கூட்டுவது, குறைப்பது மற்றும் எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் திறமை படைத்தவர். இவர் தயாரித்து வெளியான சூரரைப்போற்று (soorurai potru) என்னும் திரைப்படம் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்ததை அனைவராலும் மறக்க முடியாது. மேலும் இவர் படத்தில் நடிகராக நடிப்பதோடு மட்டுமல்லாமல் அகரம் அறக்கட்டளை மூலம் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு தமிழ்நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் தெரிவித்து வரும் நடிகர் சூர்யா தற்போது நீட் தேர்வு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்காத சூழ்நிலையில் நீட் தேர்வு மூலம் மாணவர்களை தேர்ந்தெடுப்பது எப்படி சரியாகும் என்றும் மேலும் தற்போது பரவிவரும் பெருந்தொற்றில் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வரும் நிலையில் நீட் தேர்வு எழுதுவது அவசியமா எனவும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.இவருடைய அடுத்தத் திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இவருடன் சேர்ந்து வாடிவாசல் என்னும் திரைப்படத்தை இயக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படாத நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படலாம் என்னும் செய்தி வெளிவந்துள்ளது.
வாடிவாசல் என்னும் திரைப்படம் திருவிழாக்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை கதைக்கலமாகக் கொண்டிருக்கும் எனவும் இப்படம் வாடிவாசல் (vaadivasal) என்னும் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஜல்லிக்கட்டின் பிறப்பிடமான நம் தமிழ்நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு இளைஞர்கள் அனைவரும் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் உலகம் முழுவதும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்தவித தடையுமின்றி நாடு முழுவதும் நடத்தப்பட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இந்தத் திரைப்படத்தில் சூர்யா நடிப்பதால் இந்தத் திரைப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்புகள் அவரின் ரசிகர்களியிடையே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும் இப்படத்தை ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கி, தேசிய விருது வாங்கிய வெற்றிமாறன்(vetrimaran) இயக்குவதால் இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்புகள் தமிழ்மக்களிடையே அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றே கூறலாம். இப்படத்தின் நடிகர் ,நடிகைகள் குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
