தமிழக மக்களின் அன்றாட பொழுது போக்கில் ஒரு அங்கமாக இருப்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களும், நகைச்சுவை தொடர்களும் என்றே கூறலாம். பிரபல தொலைக்காட்சி நிறுவங்களான சன் டிவி,பாலிமர் ,ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தனது சேவையை மக்களுக்காக வழங்கி வருவதில் ஒரு முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக இருந்து வருகிறது. மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை போல் அல்லாமல் இதில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களும், நகைச்சுவை தொடர்களும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு மக்களால் ரசிக்கப்படும் ஒன்றாக அமைந்திருக்கும்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்களின் மனதை கொள்ளையடித்த சில தொடர்களில் அன்புடன் டிடி, கனைக்சன்ஸ், ஜோடி நம்பர் ஒன்னு, கலக்க போவது யாரு, நீயா நானா, சூப்பர் சிங்கர் ஜூனியர், பிக் பாஸ், குக்கூ வித் கோமாளி போன்ற தொடர்கள் இன்றளவும் மக்களால் பெருமளவில் youtube தளத்தில் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். அந்த வரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பபட்டு வரும் குக்கூ வித் கோமாளி என்னும் சமையல் கலந்த நகைச்சுவை தொடர் அதிகளவு மக்களால் பார்க்கப்பட்டு விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் மற்ற நிகழ்ச்சிகளை விட TRP மதிப்பீட்டில் ஒரு மயில் கல்லை எட்டியிருந்தது.
இந்த தொடரின் சீசன்-1 ஐ விட சீசன்-2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த தொடரில் கோமாளிகளாக நடித்த புகழ், பாலா, ஷிவாங்கி ஆகியோர் இந்த தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தனர். இந்த தொடரில் நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய புகழ் மற்றும் பாலா ஆகியோருக்கு படவாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு மிமிக்ரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய புகழ், விஜய் டிவியில் ஒளிபரப்பான “சிரிப்புடா”என்னும் நகைச்சுவை தொடர் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் திரையிடப்பட்ட பல்வேறு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது முக்கிய தோற்றத்தை வெளிப்படுத்தி வந்துள்ள இவர் தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்து பல்வேறு தொடர்களில் உருக்கத்துடன் கூறியிருப்பார்.
குக்கூ வித் கோமாளி வெற்றியின் மூலம் மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் நகைச்சுவை நடிகராக மாறிய புகழ் தற்போது விஜய் டிவியில் "காமெடி ராஜா கலக்கல் ராணி" என்ற தொடரை தொகுத்து வழங்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இந்த தொடர் கூடிய விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும், இந்த தொடரில் தீபா, தங்கதுரை மற்றும் பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
