தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் இளைய தளபதி விஜய் அவர்கள் கடந்த ஜூன் மாதம் 22-ஆம் நாள் தனது 47-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் பிறந்த நாள் பரிசாக தனது தளபதி-65 படத்தின் தலைப்பை பீஸ்ட்டு (BEAST)என கெத்தாக வெளியிட்டு படத்தின் மேல் ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தார்.
இவருடைய பிறந்தநாளன்று twitter வலைத்தளத்தில் பல்வேறு திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு பலரும் அவர்களுடைய ரசிகர்களுடன் செய்தி பகிவு நேர்காணலில் ஈடுபட்டனர். அதில் பங்கு கொண்ட பிரபல இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான மிஸ்கின் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். அப்போது ரசிகர்களில் ஒருவர் "உங்கள் இயக்கத்தில் விஜய் நடித்தால் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்" என்று கேட்டதற்கு "விஜய் வைத்து படம் இயக்கினால் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இயக்குவேன்" என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே விஜய் மாஸ்டர் , தெறி மற்றும் கத்தி போன்ற படங்களில் இது போன்ற வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். மேலும் துப்பறிவாளன், பிசாசு மற்றும் அஞ்சாதே போன்ற மாறுபட்ட கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்டவர் மிஸ்கின். தற்போது விஜய் வைத்து ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் எடுக்கப்போவதாக கூறியிருப்பது ரசிகர்களின் மத்தியில் இவர்களுடைய கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
அதோடு பிசாசு-2 படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா பற்றி கேட்டதற்கு பிசாசு-2 படத்திற்காக ஆண்ட்ரியா தேசிய விருது வாங்குவார் என தெரிவித்து படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ஆதிகரித்துள்ளார். மிஸ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க திகில் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் பிசாசு-2.
இப்படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா கதைக்காக சில காட்சிகளில் நிர்வாணமாக நடிக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளதால் ஏறக்குறைய 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடித்து கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியாகலாம் என்று தெரிகிறது.
