தலைவி திரைப்படத்தின் புதிய அப்டேட் : U சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு | Thalaivi Movie New Update

             தமிழ்நாட்டில் அம்மா என்று சொன்னால் அனைவருக்கும் நினைவில் வருவது புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தான். தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் துவங்கிய ஜெ.ஜெயலலிதா அம்மையார்  அவர்கள் முன்னால் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் உடன் சேர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அரசியல் மீது தனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக எம்.ஜி.ஆர் உடன் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்ட ஜெயலலிதா அவர்கள் பிறகு அவருடன் சேர்ந்து களப்பணிகளில் ஈடுபட்ட வந்தார். 1987-ஆம் ஆண்டு திரு எம்.ஜி.ஆர்-ன் மறைவிற்கு பிறகு இவருடைய ஆளுமை திறமையினாலும், தன்னுடைய மக்கள் செல்வாக்கினாலும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்தினார்.

            பிறகு ஆறு முறை தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்த புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அம்மையார் அவர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் நாள் உடல் நலக்குறைவின் காரணாமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இறப்பில் இன்றும் சர்ச்சைகள் இருந்து வரும் நிலையில் இவருடைய வாழ்க்கை வரலாற்றை "தலைவி" (thalaivi) என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்க படக்குழுவாள் முடிவு செய்யப்பபட்டு படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பை கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24- ஆம் நாள் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளான்று படக்குழு அறிவித்திருந்தது.

            மதராசபட்டினம், தெய்வதிருமகள் மற்றும் தலைவா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் இப்படத்தை இயக்க கங்கனா ரணாவத் ஜெயலலிதா அம்மையார்  கதாபாத்திரத்திலும் மற்றும்  அரவிந்த்சாமி திரு.எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும் நடிகர் நாசர் மறைந்த முன்னால் முதல்வர் திரு.மு.கருணாநிதி கதாபாத்திரத்திலும், வி.கே.சசிகலா கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணாவும் மற்றும் வி.என்.ஜானகி ராமசந்திரன் கதாபாத்திரத்தில் நடிகை மதுபாலாவும் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

            மேலும் கடந்த நவம்பர் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 2020-ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டது. படம் வெளியிடப்படும் தேதி 23-ஏப்ரல்-2021 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக வெளியிடப்படும் தேதி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் கொரோனோ அலையின் தாக்கம் காரணமாக படத்தை OTT-யில் வெளியிடலாம் என மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சைகளுக்கும், படம் திரையரங்கில் மட்டுமே வெளியிடப்படும்! என படக்குழு அறிவித்து படம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தியா முழுவதும் தமிழ், தெலுகு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கும் படக்குழு, தற்போது இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு தணிக்கைக்குழு "U" சான்றிதழ் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.  

Post a Comment

Previous Post Next Post