தெலுகு திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலக நடிகர்களிடையே வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவர்கொண்டா. மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதையை தெரித்தெடுத்து நடிக்கும் இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திக்கொண்டார். இந்த திரைப்படம் தெலுகு மொழியில் மட்டும் வெளிப்பட்டாலும் இந்த திரைப்படத்தின் வெற்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் இந்தப்படத்திக்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான film fare அவார்டும் வழங்கப்பட்டது . இந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தத் திரைக்கதை தமிழ் மற்றும் ஹிந்தி என பல்வேரு மொழிகளிலும் படமாக்கப்பட்டு மக்களிடையே வெற்றியும் கண்டது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. மேலும் கீதா கோவிந்தம், மகாநதி மற்றும் டியர் காம்ரேடு போன்ற திரைப்படங்கள் வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவருக்கான அங்கீகாரத்தையும் அவருக்கு வழங்கியது .
தற்போது இவர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோருடன் நடித்து வரும் "லிகர்" என்னும் திரைப்படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதோடு அந்த போஸ்டருக்கு இதுவரையில் இரண்டு மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது எனவும் இதுவரை தென்னிந்தியாவில் வெளியான போஸ்டர்களில் எந்த ஒரு திரைப்படத்திற்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அளவிற்கு லைக்ஸ் கிடைக்காத பட்சத்தில் இந்த திரைப்படம் பெற்றிருப்பது ஒரு சாதனையாகவும் கருதப்படுகிறது.
திரையுலகக் கலைஞர்கள் பெரும்பாலும் தங்கள் திரைப்படங்களின் போஸ்டர்கள் , பாடல்கள் மற்றும் ட்ரைலர்கள் போன்றவற்றை youtube மற்றும் twitter போன்ற வலைத் தளங்களில் வெளியிடுவது வழக்கம். அனால் இந்த திரைப்படத்தின் போஸ்டர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு திரைக்கலைஞர்களும் இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் வெளியிடுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
