Kudi Yedamaithe என்னும் வெப் தொடரில் நடிக்கும் Amala Paul | Amala Paul starring in the web series Kudi Yedamaithe

            தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளம் வருபவர் நடிகை அமலாபால் (Amala Paul). மைனா என்னும் வெற்றிப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறியப்படும் இவர் தெய்வத்திருமகள், தலைவா மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஆடை. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்ற போதிலும் இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. மேலும் தற்போது Adho Andha Paravai Pola, Aadujeevitham, Parannu Parannu மற்றும் Cadaver போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

            வெளிநாடுகளில் தொடங்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வலைதொடர் (webseries) மோகம் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது எனறே கூறலாம். கடந்த சில நாட்களுக்கு முன் சமந்தா நடிப்பில் வெளியான family man-2 என்னும் வலை தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் வலை தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர். மேலும் வலை தொடரில் நடிப்பதன் மூலம் நடிகைகளுக்கு திரைப்படத்தை விட இரு மடங்கு சம்பள தொகை வழங்கப்படுவதால் நடிகைகள் தற்போது வலை தொடரை நோக்கி படையெடுத்து செல்கின்றனர்.

            இதையடுத்து நடிகை அமலாபால் தற்போது "குடியெடமைத்தே" என்னும் தெலுங்கு வலை தொடரில் நடித்து வருகிறார். இந்த வலை தொடரை U-turn திரைப்படத்தை இயக்கிய பவன் குமார் இயக்குக்குகிறார். முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் குற்றங்கள் நிறைந்து தயாரிக்கப்படும் இந்த வலை தொடரில் அமலாபால் ஒரு போலீஸ் காரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எட்டு காட்சிகள் நிறைந்த இந்த வலைத்தொடர் ஆஹா வீடியோ வலைத்தளத்தில் வெளியாக உள்ளது. இது குறித்து சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் " #KudiYedamaithe ஐ அறிவிப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், you're gonna be intriuged The thrill begins soon, only on @ahavideoIN. Stay tuned. என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வலை தொடரின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 

            ஏற்கனவே தமன்னா நடிப்பில் வெளிவந்த நவம்பர் ஸ்டோரி (November Story) , ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான குயின் (Queen), ஜெய் நடிப்பில் வெளியான ட்ரிப்பிள்ஸ் (Triples), மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான Breathe போன்ற தொடர்கள் தமிழில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 




  

Post a Comment

Previous Post Next Post