ஆர்யா நடித்துள்ள Sarpatta Parambarai படத்தின் புதிய அப்டேட் - Teddy திரைப்படம் போன்று OTTயில் ரிலீஸ் ஆகலாம் என தகவல் | Sarpatta Parambarai movie update

            இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பரவி வரும் கொரோனா அலையின் தாக்கம் காரணமாக திரையுலக தயாரிப்பாளர்கள் பலரும் படங்களை வெளியிட OTT வலைத்தளத்தை நாடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஜகமே தந்திரம், மலேஷியா டு அம்னீஷியா மற்றும் டெடி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் OTT வலைத்தளத்தில் வெளியாகின. இதில் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி திரைப்படம் குழந்தைகளை கவரும் வகையில் வெளியிடப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

            அறிந்தும் அறியாமலும் என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஆர்யா. இவர் நடிக்கும் அனைத்துத் திரைப்படங்களும் வித்தியாசமான கதைக்கருவை மையமாகக் கொண்டு படமாக்கப் பட்டிருக்கும். நான் கடவுள், மதராசபட்டினம் மற்றும் ராஜா ராணி போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக்கொண்டவர். ஆர்யா தற்போது அரண்மனை 3,  எனிமி மற்றும் சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ப.ரஞ்சித் இயக்ககத்தில் சார்பட்டா பரம்பரை என்னும் படத்தில் ஒரு குத்துசண்டை வீரராக நடித்து வருகிறார். இப்படம் வடக்கு சென்னையில் இடியப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரு குலங்களுக்கு இடையிலான மோதல்களை கதைக்கருவாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

            மேலும் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதாப் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வடசென்னை, காலா மற்றும் பைரவா போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைகின்றார்.  ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த "பூலோகம்" என்னும் திரைப்படம் இதே கதைக்கருவை கொண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

            இந்நிலையில் பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இப்படத்தைப் பற்றி தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது இவர் இறுதியாக நடித்து வெளிவந்த டெடி திரைப்படத்தைப் போலவே இப்படமும் தளத்தில் வெளியாகும் என தகவல்கள வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஜகமே தந்திரம், பூமி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் OTT-யில்  வெளியாகியதால் அதிருப்தியில் இருக்கும் திரையரங்க உரிமையாளர்கள்  மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படமும் OTT தளத்தில் வெளியாவது குறித்த தகவல்கள வெளிவந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Post a Comment

Previous Post Next Post