தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நடிகராக மட்டும்மல்லாமல் எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவராக விளங்குபவர் உலகநாயகன் கமல்ஹாசன். வெள்ளித்திரையில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அவ்வப்போது Big Boss போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருபவர். இவர் ஏற்று நடிக்காத காதாபாத்திரங்களே கிடையாது என்றே கூறலாம். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருப்பவராக விளங்கும் இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் Vishwaroopam II.இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உருவாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து கமல் மக்கள் நீதி மையம் என்னும் கட்சியை தொடங்கி தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் கமல்ஹாசன் , விஜய்சேதுபதி மற்றும் பாஹத் பாசில் ஆகியோருடன் "விக்ரம்" என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதோடு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் மற்றொரு படமான இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு தற்பொழுது படம் தொடங்கப்படுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தில் Kajal Aggarwal, Siddharth, Rakul Preet Singh, Priya Bhavani Shankar, Bobby Simha, Samuthirakani போன்ற பல்வேறு முன்னணி பிரபலங்களும் நடிக்க ஊள்ளதால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகள் மக்களிடம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே செல்கிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் திரைப்படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் குறித்து கமல் ஹாசனுடன் வெற்றிமாறன் பேசியதாகவும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இது குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
ஏற்கனவே ஆடுகளம், விசாரணை மற்றும் அசுரன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூரியுடன் விடுதலை என்னும் படத்திலும் அதற்கு பிறகு சூர்யாவுடன் வாடிவாசல் என்னும் திரைப்படத்திலும் பணியாற்ற உள்ளார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு கமல்ஹாசனின் படம் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.
