வெளியானது தளபதி-65 படத்தின் டைட்டில் - "BEAST" என தனது twitter பக்கத்தில் வெளியிட்டார் விஜய் | Vijay posted the title of the film - BEAST "on his twitter page

            தமிழ் திரையுலகில் 1984-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் இளைய தளபதி என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்துக்கொண்டிருப்பவர் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை அமைத்து அதில் வெற்றியை கண்டவர் மற்றும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் என இவரைப்பற்றி கூறவேண்டும் என்றால் அடுக்கிகொண்டே போகலாம் . இதற்கு சான்றாக இவர் தற்போது நடித்து வெளியாகி பாக்ஸ் ஆபிசில் உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை படைத்த மாஸ்டர், பிகில் மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களைக் கூறலாம். 

            ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடும் இவர் தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அவருடைய படம் பற்றிய தகவல்களை பகிர்வதில் ஒருபோதும் தவறியதில்லை. ஜூன் மாதம் 22-ஆம் நாள் பிறந்த நாளைக் கொண்டாடும் இவர் தற்போது தளபதி-65 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி 47-ஆவது பிறந்தநாளன்று படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் சிலநாட்களுக்கு முன் காமன் டிபி (common dp) இணைதளத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வந்தது.

            இந்நிலையில் இன்று மலை 6-மணியளவில் விஜய் தனது twitter பக்கத்தில் படத்தின் தலைப்பை புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இந்தப் படத்திற்கு டார்கெட் , கன் மற்றும் புல்லட் போன்ற தலைப்புகள் வதந்திகளாக பரப்பப்பட்ட நிலையில் பீஸ்டு (Beast) என அதிகாரப்பூர்வமாக விஜய் தனது twitter பக்கத்தில் வெளியிட்டு படத்தின் தலைப்புகள் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

            நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க,  நடிகை பூஜா ஹெக்டே மற்றும் பல நடிகர்கள் இனணந்து நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் மார்ச் மாதம் துவங்கப்பட்டது. மேலும் படத்தின் ஒரு சில காட்சிகளை படமாக்க ஜார்ஜியாவுக்கு சென்ற படக்குழு அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியதாக கூறப்படுகிறது. பிறகு கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும்  ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. படப்பிடிப்பின் இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் எஞ்சியுள்ள நிலையில் இப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

            மேலும் 2012-ஆம் ஆண்டு முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா-வுக்கு அந்தத் திரைப்படத்தின் தோல்வி காரணமாக அதன்பின் பெரிதாக படவாய்ப்புகள் தமிழ் சினிமாவில் அமையவில்லை. எனினும் ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவருக்கு விஜயுடன் நடிக்கும் இந்த பீஸ்டு திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல come back-ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post a Comment

Previous Post Next Post