தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக நீண்ட காலம் நிலைத்திருப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் 1990-களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கியவர் நடிகை மீனா. 1982-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் அதன் பின் இவருடைய நடிப்புத் திறமையினாலும் இவருடைய வசீகரிப்பான அழகினாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார். எஜமான், சேதுபதி IPS, நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, மற்றும் ரிதம் என பல்வேறு வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.
மேலும் தற்போது இருக்கும் நடிகைகளைப் போன்று கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தாமல் மிகவும் எதார்த்தமான நடிப்பில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திக்கொண்டவர். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்னும் மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் உடன் Annaatthe என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதோடு இவர் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் என்னும் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் தெலுங்கு ரிமேக்கில் தற்போது நடித்து வருகிறார். மேலும் திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் (பாபநாசம்) இவருடைய கதாபத்திரத்தில் நடிகை கௌதமி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து தமிழில் பாபநாசம்-2 திரைப்படத்தில் நடிகை மீனா நடிக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.
தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட ஒரு ரசிகருக்கு பதில் அளித்த மீனா, "கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொஞ்சம் லேட்" என்று வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார். தனது வயதைப் பற்றி கேள்வி எழுப்பிய ரசிகருக்கு “பெண்களிடம் வயதைக் கேட்பது நாகரிகமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா” என பதில் அளித்துள்ளார். மற்றொரு ரசிகர் என்றைக்காவது சினிமாவுக்கு எதுக்காக வந்தோம்னு வருத்தப்பட்டு இருக்கிறீர்களா? என ரசிகர் எழுப்பிய கேள்விக்கு "பல தடவை" என்று கண்ணில் கண்ணீர் வர சிரிக்கும் எமோஜியுடன் பதில் கூறியுள்ளார் .
மற்றொரு ரசிகர் நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்று மீண்டும் பிறந்து உங்களைத் திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியதற்கு, "நல்ல ஆசை என்ற பொருள்படும்படி ஆவ்" என குறிப்பிட்டுள்ளார் மீனா. தனுஷ் அல்லது சிம்பு இருவரில் யார் சிறந்த நடிகர் என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக இருவரும் என பதில் அளித்துள்ளார்.
மேலும் தமிழில் பாபநாசம் 2 திரைப்படத்தில் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு "நடிகர் கமலிடம் கேளுங்கள்" என்று கூறி உள்ளார். இது தவிர அவர் தனது நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படங்கள், திரைப்படத்துறை அனுபவங்கள் மற்றும் அவரது மகள் பற்றிய பல கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
