ரவுடி பேபிக்கு அம்மாவாக நடிக்கும் காஜல் அகர்வால் | Kajal Agarwal plays the mother role for Rowdy Baby

            தென்னிந்திய திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக 5 ஆண்டுகளுக்கு மேல் வளம் வருவது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. ஏனேனில் ஒரு நடிகை அவர் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்கள் மற்றும் அவர் கொடுக்கும் வெற்றிப்படங்களை பொறுத்தே பொதுவாக திரையுலகில்  அவரது மார்க்கெட் அமைந்திருக்கும். அந்த வகையில் திரையுலகில் கடந்த 15ஆண்டுகளும் மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்தும் பல்வேறு வெற்றிப்படங்களை திரையுலக்கிற்கு கொடுத்தும் இன்றும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தோடு வலம் வருபவர்கள் lady superstar என்று அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா.

            தமிழ் திரையுலகில் பெரும்பாலும் நடிக்க வரும் நடிகைகள் ஒருசில படங்களில் ஹீரோயின்களாக நடித்து விட்டு, அதன்பின் தங்களது மார்க்கெட் குறைந்ததும், குணசித்ர வேடம் அல்லது அம்மா வேடங்களை ஏற்று நடிப்பதை ஒரு போக்காக கொண்டுள்ளனர் என்றே கூறலாம். மேலும் பல நடிகைகள் சின்னத்திரையை தேர்ந்தெடுத்து அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் போன்றவற்றிலும் நடித்து வருகின்றனர். அதோடு சில நடிகைகள் ஒரு நாள் சின்னத்திரையில் நடிப்பதற்கு லட்ச கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், சுகன்யா போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக நடித்து வருகின்றனர்.

            மேலும் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகைகளும் அம்மா வேடத்தில் நடிப்பது ஓரு போக்காக மாறி வருகிறது என்றே கூறலாம்.  அந்த வகையில் நடிகை நயன்தாரா கடந்த 2015- ஆம் ஆண்டு அம்மா வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் Bhaskar the Rascal. இந்த படத்தில் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.  திருமணமாகி தனியாக வாழ்ந்து வரும் இவர்கள் சந்திக்கும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை காமெடி கலந்த எதார்த்தமான படமாக மக்களுக்கு வழங்கியிருப்பார் இயக்குனர் Siddique. இப்படம் வெளியாகி பெரும் வரவேற்ப்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. தமிழில் இப்படத்தில் அரவிந்த் சுவாமி மற்றும் அமலாபால் ஆகியோரும் நடித்திருந்தனர். 

            இதனையடுத்து தல "அஜித் குமார்" நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். நடனக்கலை கற்றுத்தரும் குருவாக படத்தில் தோன்றும் இவர் ஒரு குழந்தைக்கு தாயாகவும், அஜித்துடன் "மழை வர போகுதே" என்னும் பாடலிலும் நடித்து அசத்தியிருப்பார். 

            இவரைத் தொடர்ந்து பிரபல முன்னணி நடிகையான அமலா பால் கடந்த 2016-ம் ஆண்டு அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் அம்மா கணக்கு. இப்படத்தில் அமலாபால் ஒரு வேலைக்காரியாக நடித்திருப்பார். தனது மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அமலாபால் மகளின் பள்ளியில் சேர்ந்து படிப்பது போன்று படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும். இப்படமும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருந்தது. 

            இவ்வாறு பலரும் அம்மா வேடத்தில் நடித்து விட்ட நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகையான காஜல் அகர்வால் அம்மா வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருக்கும் இவர் கடந்த அக்டோபர் மாதம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க தற்போது Hey Sinamika, Indian 2 மற்றும் Acharya போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 

            இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜா சரவணன் இயக்கும் Rowdy baby என்னும் படத்தில் லட்சுமிராய், சத்தியராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் ரவுடிபேபிக்கு அம்மாவாக அமலாபால் நடிப்பதாகவும் இவர்களுக்கு இடையில் நடக்கும் காட்சிகளை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

Post a Comment

Previous Post Next Post