ஹிந்தியில் வெளியாகும் சூரரைப்போற்று திரைப்படம் | Surya's Soorarai Pottru movie to be released in Hindi

             தமிழ் திரையுலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்து நடித்து வருபவர் நடிகர் சூர்யா. மிகவும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவர் நடித்து வெளியான படங்களில் Friends, Unnai Ninaithu, Pithamagan, 24, Soorarai Pottru போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களின் இயக்கத்தில் Navarasa என்ற Netflix தொடரில் நடித்து முடித்திருந்தார்.

            நடிகர் சூர்யா தற்போது பெயரிடப்படாத ஒரு படத்தில் இயக்குனர் பாண்டிராஜுடனும் மற்றொரு படத்தில் இயக்குனர் ஞானவேல் உடனும் பணியாற்றி வருகிறார். மேலும் அசுரன் மற்றும் வடசென்னை போன்ற படங்களை இயக்கிய வெற்றிமாறனுடன் வாடிவாசல் என்னும் படத்திலும் நடிக்கவுள்ளார்.  ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். 

            அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவரே தயாரித்து நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தில் இவருடன் பரேஷ் ராவல், அபர்ணா பலமுரளி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கொரோனோ அலையின் தாக்கம் காரணமாக திரையரங்கில் வெளியிடப்படாமல் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரபல OTT தளமான Amazon Prime  தளத்தில் வெளியிடப்பட்டது. படம் வெளியானதும் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களை பெற்றதுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்தது.  

            ஒரு தொலைதூர கிராமத்தை சேர்ந்த மாறன் என்னும் சாதாரண இளைஞன் சொந்தமாக ஒரு விமான சேவை தொடங்கி அதனை பட்டி தொட்டியெங்கும் உள்ள ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் விதமாக சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக அவர் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையமாகக் கொண்டு கதைக்களத்தை அமைத்திருப்பார் இயக்குனர் சுதா கொங்கரா. திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு சக்கை போடு போட்டது. 

            அமெரிக்காவின் பிரபல விருது வழங்கும் நிகழ்ச்சியான 78-வது கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவுகளின் கீழ் வெளியாகும் இந்தியாவின் பத்து படங்களில் சூருரைப் போற்று இடம்பெற்றிருந்தது. அதோடு பிரபல திரைப்பட மதிப்பீடு வழங்கும் இணையத்தளமான  IMDB இணையத்தளத்தில் சூரரைப்போற்று  திரைப்படம்  9.1 மதிப்பீட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.  The Shawshank Redemption (1994) மற்றும் The Godfather (1972) ஆகிய படங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. 

            இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட திட்டமிட்டிருந்த சூர்யா அதனை அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிப்படுத்தினார் . அதாவது பிரபல தயாரிப்பு நிறுவனமான Abundantia Entertainment-உடன் Suriya's 2D Entertainment இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளது என்றும் இப்படத்தை தமிழில் இயக்கிய சுதகொங்கரா இயக்கவுள்ளார் என்றும் அறிவித்து புகைப்படம் ஒன்றையும் Twitter பக்கத்தில் வெளியிட்டிருந்ததது. மேலும் பாலிவுட்டில் இப்படத்தை பிரபல நடிகர் Sahid kapoor அவரே தயாரித்து நடிக்க ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் நடிகர் நடிகைகள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் கூடிய விரைவில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 


Post a Comment

Previous Post Next Post