இன்ஸ்டாகிராமில் கோடிகளைக் குவிக்கும் Priyanka Chopra மற்றும் Virat Kohli | Priyanka Chopra and Virat Kohli amassing millions on Instagram

            சமூக வலைத்தளங்களான Facebook, Twitter மற்றும் Instagram போன்ற வளைதளங்கள் மக்களின் அத்தியாவசிய பொழுது போக்கு சாதனங்களில் ஒன்றாக மாறி வருகிறது. இந்த சமூக வலைத்தளங்களின் வருகைக்கு பிறகு மக்கள் தொலைக்காட்சி பயன்பாட்டை குறைத்துக் கொண்டனர் என்றே கூறலாம். வீடியோ கால், ஆடியோ கால், செய்தி பதிவிடல், பிரபலங்களின் செய்திகளை உடனுக்குடன் அறிதல் மற்றும் நண்பர்களுடன் குழுக்களாக சேர்ந்து அரட்டை அடித்தல் போன்ற பல்வேறு சேவைகளை இந்த சமூக வலைத்தளங்கள் எந்த ஒரு கட்டணமுமின்றி இலவசமாக மக்களுக்கு வழங்கி வருகிறது.

            பல்வேறு திரைத்துறை சார்ந்த பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்வதற்காகவும், தங்கள் படங்கள் அல்லது விடியோக்கள் ஆகியவற்றை விளம்பரப் படுத்தவதற்காகவும் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக அந்த வலைத்தளங்கள் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களின் பின்தொடர்பவர்களையும் (followers) மற்றும் நட்சத்திர அந்தஸ்த்தையும் பொறுத்து வழங்கி வருகிறது. 

அந்த வகையில் உலக அளவில் பிரபல போர்த்துகீசிய கால் பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) பட்டியலில்  முதலிடத்தில் இருக்கிறார். இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் 308 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கும் இவர், தான் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் 11.9 கோடி ரூபாய் தொகையை வாங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பட்டியலில் பல்வேறு சினிமா மற்றும் விளையாட்டுப் பிரபலங்களும் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு தி ராக் என அழைக்கப்படும்  Dwayne Johnson இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

            இந்திய சினிமா நடிகையான பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) இந்தப் பட்டியலில் 27-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பன்முக திறைமைகளோடு திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் தற்போது ஹாலிவுட்டிலும் திரைப்படம், வெப் சீ ரிஸ் என பிஸியாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் 65 மில்லியன் பாலோயர்களைக் கொண்டிருக்கும் இவர் தான் பதிவிடும் ஒவொரு பதிவிற்கும் 3 கோடி ருபையை வாங்குவதாகக் கூறப்படுகிறது. இந்தப்பட்டியலில் இவர் 27-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

            இந்தப் பட்டியலில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான virat kholi பிரியங்கா சோப்ராவை பின்னுக்குத் தள்ளி 19-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.  பிரபல இந்திய நடிகையான அனுஷ்கா ஷர்மாவை (Anushka Sharma) திருமணம் செய்துகொண்ட பிறகு இவரது சமூக வலைதள பதிவுகள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது என்றே கூறலாம். அந்த வகையில் அவர் சமீப காலத்தில் வெளியிட்ட ஒரு பதிவிற்காக கிடைத்த பெருந்தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் 100 மில்லியன் பாலோயர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 132 மில்லியன்  பாலோயர்களைக் கொண்டிருக்கும் இவர் தான் பதிவிடும் ஒவொரு பதிவிற்கும் 5 கோடி ருபாய் வாங்குவதாகக் கூறப்படுகிறது.


  

Post a Comment

Previous Post Next Post