பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த இயக்குனர் ராஜமௌலி. இவர் தற்போது D. V. V. Danayya தயாரிப்பில் N. T. Rama Rao Jr, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt மற்றும் Olivia Morris போன்ற பிரபலங்களுடன் இணைந்து RRR என்னும் படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் உள்ள அலுமினிய தொழிற்சாலையில் அமைக்கப்பட்ட ஒரு தொகுப்பில் படமாக்கினர். பின்னர் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கிய படக்குழு கொரோனோ அலையின் தீவிர தாக்கம் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த டிசம்பர் 6-ஆம் நாள் தொடங்கிய படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய ராஜ மௌலி அங்கு நடந்த ஒரு சம்பவம் குறித்து தனது twitter வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது "லுப்தான்சா விமானம் மூலம் அதிகாலை ஒரு மணிக்கு விமான நிலையம் வந்தடைந்தோம். அங்கு RT PcR சோதனைக்காக படிவம் ஒன்றை கொடுத்து அதை நிரப்புமாறு கூறினார்கள். அப்போது அனைத்துப் பயணிகளும் அந்தப் படிவத்தை தரையில் அமர்ந்தும், சுவரின் மேல் வைத்தும் நிரப்பினார்கள். அதைபார்ப்பதற்கு நன்றாக இல்லை என்றும் மேலும் மேசை வழங்குவது ஒரு சாதாரண செயல் அதை வழங்கலாம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் "வெளியேறும் வாயிலின் அருகே நிறைய தெரு நாய்கள் சுற்றித் திரிவதாகவும் வெளிநாட்டில் இருந்து வரும் மக்களுக்கு இந்தியாவின் மீதான முதல் பார்வை இதைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்றும் தயவு செய்து இதை கொஞ்சம் கவனியுங்கள்" என வருத்தத்தோடு பதிவிட்டிருந்தார். ராஜமௌலியின் இந்த twitter பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
