திரையுலகில் ஒரு திரைப்படம் வெற்றி பெற அதில் இடம்பெற்றுள்ள பாடல்களும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. சமீப காலங்களில் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பே பாடல்களை வெளியிடுவது ஒரு போக்காக மாறி வருகிறது. ஒரு திரைப்படத்தை காசு கொடுத்து வாங்குவது போலவே திரைப்பட பாடல் உரிமையையும் கோடி கணக்கில் கொடுத்து வாங்கி வெளியிடுகின்றனர். மேலும் அந்த பாடல்களை அப்படத்திக்கான விளம்பர வேலைகளுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர். 
மேலும் பாடல்கள் மூலம் படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்புகளை மக்களிடம் அதிகரிக்க இந்தப் போக்கு படக்குழுவிற்கு பெரிதும் உதவியாக உள்ளது என்ரே கூறலாம். அதே சமயம் வெளிவரும் பாடல்கள் மக்களுக்கு பிடிக்காமல் போனால் அந்தப் படத்தின் மேல் ஒரு எதிர்மறையான தோற்றம் உருவாகி படத்தின் வருவாயை பாதிப்பதாகவும் உள்ளது. அந்த வகையில் தற்போது வெளிவரும் படங்களில் நடிகர்களைப் போன்றே இசையமைப்பாளர்களுக்கும் ஒரு பெரிய தொகையை அளித்து மிகவும் பிரமாண்டமான பொருட் செலவில் பாடல்களை தயாரித்து வருகின்றனர்.
இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிக்கர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டுவெளியான திரைப்படம் 2.0. இந்தப்படத்தின் முதல் பாகம் எந்திரன் வெளியாகி மக்களிடையே நல்ல வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படமும் வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் A. R. Rahman இசையமைத்திருந்தார். அந்த வகையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வெளியாகி பட்டையை கிளப்பியது என்றே கூறலாம். மேலும் இப்படத்தின் ஆடியோ உரிமைகள் சுமார் 5.2 கோடிகள் வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே எந்த ஒரு படத்தின் ஆடியோ உரிமையும் இந்த அளவு பெரிய தொகைக்கு விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தத்தக்கது.
இப்படத்தைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் வெளியான பாடல்களும் உலகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். இப்படத்தின் ஆடியோ உரிமைகள் சுமார் 4.5 கோடிகள் வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி இந்திய திரையுலகையே கன்னட சினிமா பக்கம் திரும்பி பார்க்க வாய்த்த திரைப்படம் KGF. இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி வசூல் சாதனனயை படைத்தது என்றே கூறலாம் . அந்த வகையில் தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வரும் பட்சத்தில் இந்தப் படத்தின் ஆடியோ உரிமைகள் 7.2 கோடிகளுக்கு விற்கப்பட்டு தற்போது தென்னிந்தியாவில் மாஸ்டர் மற்றும் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.