அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | Annatha movie release date

             இந்திய சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி தனது நடிப்புத் திறமையின் மூலம் ஹீரோ என்ற அந்தஸ்தோடு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் இவர் தற்போது Sun Pictures தயாரிப்பில் சிவா இயக்கத்தில் Annaatthe என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

            கடந்த 2019 டிசம்பர் 11-ஆம் நாள்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளன்று சென்னையில் உள்ள சன் டிவி நெட்வொர்க்கின் அலுவலகத்தில் "அண்ணாத்த" படத்தின் தொடக்க விழாவுக்கான பூஜைகள் நடத்தப்பட்டு படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர். பிறகு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் Man vs Wild என்னும் நிகழ்ச்சியில் Bear Grylls-உடன் சேர்ந்து நடிக்க நேபால் சென்றதால் படப்பிடிப்பு தாமதமானது. பிறகு கோரோனோ அலையின் தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் ரஜினி காந்த் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. 

            தற்போது இப்பட பணிகளை முடித்து கொடுத்துவிட்ட ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ஜூலை இரண்டாவது வாரம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு சிறுத்தை, வீரம் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கிய சிவா இயக்குவதால் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த கமர்சியல் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. அதோடு இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற பிரபல திரையுலக பட்டாளமே நடிப்பதால் இந்தப்படத்திக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது.   

            இந்நிலையில் இப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர் படக்குழு. அதாவது நவம்பர் மாதம் 4-ஆம் தேதி வெளியாகும் என ரஜினி ஸ்டைலாக நிற்பது போன்ற போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதால் இம்மாதம் மத்தியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் 50 சதவீதி இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது. 


Post a Comment

Previous Post Next Post