வெளியானது வலிமை படத்தின் Firstlook motion poster - மகிழ்ச்சியில் தல ரசிகர்கள் | Actor ajith's Valimai movie Firstlook motion poster has released

            தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் தல அஜித் குமார். மற்ற நடிகர்களை போலல்லாமல் நல்ல கதைகளை மற்றும் தேர்ந்தெடுத்து, வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்து வருபவர். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்தப்படம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. எனினும் அவர் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தை படத்தில் ஏற்று நடித்திருந்தார். 

            இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வினோத்துடன், போனி கபூர் தயாரிப்பில் "வலிமை" (Valimai) என்னும் படத்தில் நடிப்பதாக அஜித்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிடியில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் அஜித் குமார், Huma Qureshi, Pearle Maaney, Kartikeya Gummakonda  ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கொரோனா அலையின் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதம் துவங்கியது. படத்தின் தலைப்பு வலிமை என்று மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் அப்டேட் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. 

            இந்நிலையில் மற்ற படங்களின் அறிவிப்புகளும், ட்ரைலர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்க வலிமை திரைப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது அவர்களின் ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளமான Twitter வலைதளத்தில் #valimaiupdate என்னும் hashtag-ஐ  அவ்வப்போது Trend செய்து கொண்டிருந்தனர் . மேலும் படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில் கோரோனோ அலையின் தாக்கம் காரணமாக படத்தை விளம்பரப்படுத்துதல் போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 

            இந்நிலையில் சில ரசிகர்கள் கிரிக்கெட் மைதானங்களிலும், பொது அரங்குகளிலும், அரசியல் நிகழ்வுகளிலும் மற்றும் சமீபத்தில் நடந்த யூரோ கால்பந்து போட்டியிலும் வலிமை அப்டேட் குறித்த வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு செய்திகள் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் படத்தின் கடந்த மார்ச் மாதம் valimai first look poster வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், அதனை அஜித் பிறந்தநாளான மே 1 அன்று ஒத்திவைத்தனர் படக்குழு. எனினும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட தேதியில் first look poster-ஐ படக்குழுவாள் வெளியிட முடியவில்லை.

            இந்நிலையில் வரும் ஜூலை 15-ஆம் தேதி valimai first look poster-ஐ வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழுவினர் ரசிகர்களின் ஆவலை புரிந்து கொண்டு ஜூலை 11 அன்று மாலை 6 மணியளவில் போஸ்டர் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக  Twitter பக்கத்தில் அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை 11 அன்று மாலை ஆறு மணிக்கு Valimai firstlook motion poster வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

            பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தெறிக்க விடும் BGM-இல் வெளியான இந்த வீடியோவில், தல அஜித்தை நோக்கி ஒரு ரவுடி கும்பல் வருவது போலவும், அவர் கையில் பொருளுடன் மாஸாக அவர்களை எதிர்கொள்வது போலவும் போஸ்டர்கள் அமைந்திருந்தன. மேலும் "Power is a state of mind" என்னும் வாசகத்தோடு இறுதியில் அவருக்கே உரித்தான ஸ்டைலில் Cooling Glass மாட்டிக்கொண்டு திரும்பிப் பார்ப்பது போன்றும், பைக்கில் ஸ்டண்ட் செய்வது போன்றும் போஸ்டர்கள் வெளியாகியிருந்தன.  

            வலிமை படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படத்தில் அம்மா சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் படத்தில் அம்மாவை புகழ்ந்து பாடும் பாடல் ஒன்று இருப்பதாகவும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். 

            போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் அஜித்துடன் ஹுமா குரேஷி , பேர்லே மானே மற்றும் கார்த்திகேய கும்மகொண்டா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாத நிலையில் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post