கட்டப்பா எதற்காக மகேந்திர பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியுடன் முடிவடைந்த பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகத்தின்(Baahubali: The Beginning) தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் அமைந்துள்ளது.
நடிகர்கள் :
பிரபாஸ் - அமரேந்திர பாகுபலி மற்றும் மகேந்திர பாகுபலி (சிவு/சிவா) [இரண்டு வேடங்கள்]
ராணா தகுபதி - பல்வாள்தேவன் / பல்லல தேவன்
அனுஷ்கா ஷெட்டி - தேவசேனை / தேவசேனா
தமன்னா - அவந்திகா
ரம்யா கிருஷ்ணன் - சிவகாமி
சத்யராஜ் - கட்டப்பா
நாசர் - பிங்கலதேவன் / பிஜ்ஜல தேவா
கதை :
பாகுபலி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த முதல் பாகத்தில் காலக்கேயன் படைகளை வென்று மகிஹ்மதி அரியணைக்கு அரசனாகும் தகுதியுடைய அமரேந்திர பாகுபலி பல்வாள்தேவனின் சூழ்ச்சியால் எவ்வாறு கட்டப்பாவால் வீழ்த்தப்பட்டார் என்பதை கட்டப்பா சிவுவிடம் விவரிக்கின்றார். அதோடு முதல் பாகம் முடிவடைந்தது.
கலகேயர்களை வென்ற பிறகு, அமரேந்திர பாஹுபலி மகிஷ்மதியின் வருங்கால மன்னராகவும், அதன் தளபதியாக பல்வாள்தேவாவும் சிவகாமியால் முடிசூட்டப்படுகின்றனர். கட்டப்பாவுடன் சேர்ந்து, ராஜ்யத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுற்றுப்பயணம் செய்ய ராஜமதா சிவகாமி அமரேந்திர பாகுபலியிடம் உத்தரவிடுகிறார். சுற்றுப்பயணத்தின் போது, குண்டல தேசத்தின் இளவரசி தேவசேனா / தேவசேனை, அவர்களை சந்திக்கிறார். அவரின் மேல் காதல் வயப்பட்ட அமரேந்திர பாகுபலி ஒரு அனாதை போல் நடித்து தன்னுடைய மாமாவாக கட்டப்பாவை காட்டிக்கொண்டு குண்டல தேசத்தில் ஒரு சிறிய பணியில் வேலைக்கு நுழைகிறார்.
அமரேந்திராவின் செயல்பாடுகளை அறிந்த பல்வாள்தேவன் குண்டல தேச இளவரசியின் உருவப்படத்தை பார்த்ததும் அவளை அடைய எண்ணுகிறான். அதற்காக தனது மாமாவுடன் சேர்ந்து பாகுபலியை பழிவாங்க திட்டம் தீட்டுகிறான். பின்னர் ராஜமதா சிவகாமியிடம் சென்று அம்மா எனக்காக எதுவேண்டுமானாலும் செய்வாயா என கேட்க, மகனின் மேலுள்ள பாசத்தில் கேள் என்று சிவகாமி சொல்ல, அப்போது பல்வாள்தேவன் குண்டல தேசத்தின் இளவரசியை தனக்கு பிடித்து இருப்பதாகவும், அவளை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூறுகிறான். மகேந்திர பாகுபலியின் செயல்பாடுகளை அறியாத ராஜமதா சிவகாமி, பல்வாள்தேவனுக்கு இளவரசி தேவசேனாவை மணமுடிக்க வாக்கு அளிக்கிறார்.
திருமண முன்மொழிவை ஒரு ஆதரவாக வழங்கும் ஒரு அழைப்பை ஏற்பாடு செய்து அதனை தூதுவனிடம் கொடுத்து குண்டல தேசத்திற்கு தூது அனுப்புகிறார் சிவகாமி. இதனை பார்த்த தேவ சேனா தான் அவமானப்படுவதாக உணர்ந்து இந்த திட்டத்தை கடுமையான பதிலுடன் நிராகரித்து பதில் தூது அனுப்புகிறார். இந்த பதிலைக் கண்டு ஆத்திரமடைந்த சிவகாமி, தேவசேனாவை சிறைபிடித்து வர அங்கு இருக்கும் அமரேந்திர பாகுபலியிடம் தனது உத்தரவை தூதாக அனுப்புகிறார்.
இதற்கிடையில், குண்டல தேசத்தை பிண்டாரிஸ் என்ற இராணுவம் தாக்குகிறது. கட்டரேப்பாவின் உதவியுடன் அமரேந்திர பாகுபலி, தேவசேனாவின் தாய்வழி உறவினர் குமார வர்மா ஆகியோரின் வீரமிக்க போர் திறமையால் குண்டல தேசம் காப்பாற்றப்படுகிறது. அப்பொழுது மகேந்திர பாகுபலியின் திறமைகளை கண்டு மெய் சிலிர்க்கிறார் தேவசேனா. இவன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது என உணர்ந்த தேவசேனா போர் முடிந்ததும் அவருடைய உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துமாறு அமரேந்திராவை நிர்ப்பந்திக்கின்றார். வேறு வழியின்றி தான் மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் என்றும், தான் இங்கு வந்ததன் நோக்கம் குறித்தும் எடுத்துரைக்கிறார் மகேந்திர பாகுபலி.
அப்போது மகிஹ்மதியிடமிருந்து தூதாக வந்த பறவை பாகுபலியிடம் தூது செய்தியை அளிக்கின்றது. இதனை கண்ட தேவசேனா ஆத்திரமடைந்து போருக்கு சம்மதிக்கின்றார். அப்போது பாகுபலி தன்னுடைய காதலை வெளிப்படுத்தி தன்னுடன் வருமாறும், உங்களுக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும், தேவசேனைக்கு உறுதியளித்து இருவரும் மஜிஹ்மதி நோக்கி பயணத்தை தொடர்கின்றனர்.
மஹிஷ்மதியை அடைந்ததும், குண்டல தேசத்தில் நடந்த தவறான புரிதல் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அமரேந்திர பாகுபலிக்கு அரியணையையோ அல்லது தேவசேனாவையோ தேர்வு செய்ய வேண்டும் என்று ஒரு இறுதி தீர்மானம் வழங்கப்படுகிறது. தேவசேனைக்கு தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற அரியணையை பல்வாள் தேவனுக்கு விட்டுக் கொடுத்து தேவசேனாவை மணமுடிகிறார் அமரரேந்திர பாகுபலி. பின்னர் அமரேந்திர புதிய தளபதியாக முடிசூட்டப்படுகிறார். எனினும் மக்கள் மத்தியில் பல்வாள்தேவனை காட்டிலும் அமரேந்திர பாகுபலிகே ஆதரவு மற்றும் வரவேற்பு அதிகமாக காணப்படுகிறது. முடிசூட்டும் விழாவின் போது பாகுபலிக்கு மக்களிடத்தில் இருந்த வரவேற்பைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்க்கின்றனர்.
பின்பு பாகுபாலியும் தேவசேனாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். தேவசேனாவின் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது தனது கடமைகளை ஆற்ற பல்வாள்தேவன் வரும்போது பரிசாக பாகுபலியின் தளபதி பதவியை சேதுபதிக்கு வழங்குகிறார். இதனை கண்டும் காணாமல் இருக்கும் சிவகாமியை பார்த்து அவரது செயலற்ற தன்மைக்கு எதிராக பேசுகிறார் தேவசேனா. இதனால் கோபமடைந்த பல்வாள்தேவனும், சிவகாமியும் வெளியேறுகின்றனர். மேலும் பாகுபலியை மஜிஹ்மதியின் அரசனாக வேண்டுமென்று ஆசைப்படுவதாக கூறுகிறார் தேவசேனா.
பின்னர் மகில்ஹ்மதியில் வாசலில் தடுக்கப்பட்டு தேவசேனா பாலியல் சீண்டலை ஏற்படுத்திய காவலனின் விரல்களை துண்டிக்கின்றார். இதனால் தேவசேனாவின் கைகளில் சங்கிலியை மாட்டி குற்றவாளியாக அழைத்து சென்று மன்னன் பல்வாள்தேவன் முன்னாள் விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது அமரேந்திர பாகுபலி குறுக்கிடுகிறார். நடந்ததை கூறும்போது காவலன் தடுமாறுகிறான். அனால் தேவசேனா உண்மையை கூறவே அப்போதே காவலனின் தலையை துண்டித்து சிவகமாமியால் குற்றவாளி என சித்தரிக்கப்பட்டு, பாகுபலி அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுகிறார்.
பின்னர் மக்களுடன் மக்களாக அமரேந்திராவும், தேவசேனாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களின் வேலைகளை எளிதாக்க உதவுகிறார் பாகுபலி. இவர்களின் செயல்களைக் கண்டு பொறாமை கொள்ளும் பல்வாள்தேவனின் தந்தை பாகுபலியை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறான். பின்னர் குமார வர்மாவை வைத்து ராஜாவை கொல்ல திட்டம் தீட்டுவதாக நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்து குமார வர்மாவை கொலை செய்கின்றனர். மேலும் இவரை அனுப்பியது பாகுபலிதான் என்றும் பாகுபலி இருக்கும்வரை பல்வாள்தேவன் உயிரோடு இருக்க முடியாது எனவும் கூறி சிவகாமியை சமாதானப்படுத்தி பாகுபலியை கொலை செய்ய சம்மதம் வாங்குகிறார் பிங்கலதேவா. சிவகாமி, கட்டப்பாவை அழைத்து பாகுபலியை கொல்லுமாறு கூற, கட்டப்பா மறுக்கின்றார். அனால் சிவகாமி தன்னுடைய முடிவில் உறுதியுடன் இருக்கவே கட்டப்பா பாகுபலியை கொலை செய்ய சம்மதிக்கின்றார். பின்னர் மகேந்திர பாகுபலியுடன் நடந்த சண்டையில் வருடைய முதுகில் குத்தி அவரை கொலை செய்கிறார் கட்டப்பா.
அமரேந்திராவின் மரணத்திற்குப் பிறகு, கட்டப்பா விரைவில் பல்வாள்தேவா மற்றும் அவரது தந்தை பிங்கலதேவாவின் துரோகத்தை அறிந்து, சிவகாமிக்குத் தெரிவிக்கின்றார். பாகுபலியின் மரண செய்தி கேட்டு பீதியடைந்த ஊர்மக்கள் அனைவரும் அரண்மனை வாயிலில் கூடி சிவகாமியிடம் பாகுபலி குறித்து கேட்கின்றனர். பீதியடைந்த கூட்டங்களுக்கு அமரேந்திர பாகுபலி இறந்துவிட்டார் என்றும் குழந்தை மகேந்திர பாகுபலி அடுத்து அரியணையில் ஏறுவார் என்றும் தெரிவிக்கின்றார்.
பல்வாள்தேவாவும் அவரது ஆட்களும் ராணியைக் கைப்பற்றப் கைப்பற்றி கொலை செய்ய முயல்கின்றனர். அவள் புதிய ராஜாவுடன் தப்பி ஓட முயற்சிக்கும்போது காவலர்களின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு நதியில் விழுந்து உயிரை விடுகிறாள். அதன்பின் தேவசேனாவை சிறைபிடித்து அவரை சித்ரவதை செய்யும் கொடுங்கோல் ஆட்சியாக பல்வால் தேவனின் ஆட்சி மாறுகிறது.
முழு கதையையும் கேட்டபின், மகேந்திர பாஹுபலி (சிவா) கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து உடனடியாக போரை அறிவிக்கிறார். படைத்தளபதி கட்டப்பாவுடன் கிராமவாசிகள் மற்றும் சிதறிய வீரர்களைக் கொண்ட கிளர்ச்சிப் படையை அவர் கூட்டிச் செல்கிறார். முதற்கட்டமாக நடந்த தாக்குதலில் பல்வாள்தேவன், தேவசேனாவை மீண்டும் தூக்கி செல்கிறான். இதனால் கோபமடைந்த மகேந்திர பாகுபலிக்கு கட்டப்பா அறிவுரை கூற அவர்கள் புதிய யுத்தியை பயன்படுத்தி மீண்டும் மகில்ஹ்மதியை தாக்குகின்றனர். பின்னர் பல்வாள்தேவனுக்கும், மகேந்திர பாகுபலிக்கும் இடையில் கடும் சண்டை நிகழ்கிறது. இந்த சண்டையில் பல்வாள்தேவன் தோற்க்கடிக்கப்பட்டு தேவசேனாவால் எரிக்கப்படுகிறான்.
அடுத்த நாள், மகில்மதியின் புதிய ராஜாவாக மகேந்திர பாகுபலி முடிசூட்டப்பட்டு ராணியாக அவந்திகா அறிவிக்கப்படுகிறாள். எனது தலைமையின் கீழ் மகில்மதியில் அமைதியையும், நீதியையும் நிலைநாட்ட பாடுபடுவதாக பாகுபலி உறுதிமொழி கூற படம் நிறைவடைகிறது.
விமர்சனம் :
எஸ்.எஸ்.மௌலியின் கற்பனைக் கால படத்தின் இறுதி பகுதியில் ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. விசுவாசமான ஜெனரல் கட்டப்பா ஏன் அமரேந்திர பாகுபலியைக் கொன்றார்? என்ற கேள்வியுடன் முடிந்த பாகுபாலி திரைப்படத்தின் முதல் பாகத்தை தற்போது முடித்து வைத்துள்ளனர். இது ஒரு பழிவாங்கும் கதையாக அமைந்துள்ளது. படத்தில் ராஜமௌலி ஒரு வெற்றிகரமான யுத்தியை கையாண்டு மக்களிடம் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம். இசை, நாடகம் மற்றும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் கலந்த ஒரு காமிக் கதை போன்று தயாரித்திருக்கின்றார். படத்தை இந்திய சினிமாவிலின்று ஒரு படி மேலே சென்று ஹாலிவுட் படத்திற்கு நிகராக தயாரித்துள்ளார் இயக்குனர்.
ஏனெனில் திரைப்படத்தில் பறக்கும் கப்பல்கள், ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும் எருதுகள் மற்றும் பனை மரங்களின் உதவியுடன் அணி குதித்தல் ஆகியவை பிரமிப்பூட்டுவதாக அமைந்துள்ளன. படத்தில் கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு மிகச்சிறந்ததாக இருக்கிறது. படத்தில் போலியான காட்சிகள் கூட படத்திற்கு தகுந்தவாறு , மக்கள் நம்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எம்.எம்.கீரவணியின் இசை திரையில் நடக்கும் அனைத்திற்கும் சிறந்த பின்னணியை வழங்குகிறது என்றே கூறலாம்.
பிரபாஸின் கவர்ச்சியான நடிப்பை பயன்படுத்திக்கொண்டு ராஜமௌலி அவரை மேலும் திரையில் அழகாக காட்டியுள்ளார். முதல் பாகத்தில் கதாநாயகியாக காட்டப்பட்ட தம்மன்னாவிற்கு இரண்டாம் பாகத்தில் பெரிதாக காட்சிகள் அமையவியலை. படத்தில் அனுஷ்காவின் காட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்டப்பட்டு சிவகாமிக்கு போட்டியாக அமைந்துள்ளது என்றே கூறலாம். மேலும் சிவகாமி கோவப்படும்போது முகத்தில் அவருடைய வெளிப்பாடுகள் அவருடைய கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. அது தவிர கட்டப்பாவின் கம்பீரமான நடிப்பும், நாசரின் வில்லத்தனமும் படத்திற்கு மேலும் கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் பாகுபலி 2 (Baahubali 2: The Conclusion) திரைப்படம் ஒரு முழுமையான சண்டைக்காட்சிகள் நிறைந்த, அனைவரும் ரசிக்கும்படி எடுக்கப்பட்ட ஒரு வரலாற்று பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.