I Tamil movie review

            லிங்கேசன் என்னும் இளைஞன் ஐ என்னும் கொடிய வைரஸால் தன்னுடைய எதிரிகளால் பாதிப்புக்குள்ளாகிறார். அதன்பின் அவர்களை எவ்வாறு பழிவாங்கி அதன்பின் அவருடைய காதலியுடன் எவ்வாறு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார் என்ற கதைக்களத்தை கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். 

நடிகர்கள் :

விக்ரம்   -   லிங்கேசன்  

எமி ஜாக்சன்  - தியா 

சுரேஷ் கோபி  -  டாக்டர் வாசுதேவன் 

சந்தானம்   -  பாபு

உபேன் படேல்  -    ஜான்   

ஜி ராம்குமார்   -  இந்திரகுமார் 

ஓஜாஸ் ரஜனி   -   ஒஸ்மா ஜாஸ்மின் 

எம்.காமராஜ்    -     ரவி

பின்னணி :

இயக்கம்  -  சங்கர்

எழுதியவர்   -  சுபா (உரையாடல்)

திரைக்கதை/கதை   - சங்கர்

உற்பத்தி  - வி. ரவிச்சந்திரன்

ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம்

இசை    -    ஏ.ஆர்.ரஹ்மான்

தயாரிப்பு நிறுவனம்  -  ஆஸ்கர் திரைப்பட நிறுவனம்  

கதை :

            சென்னையில் மிஸ்டர் இந்தியா ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் லிங்கேசன் என்னும் இளைஞர் பயிர்ச்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இவரது விடாமுயற்சியின் பலனாக மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்று மிஸ்டர் இந்தியா தகுதி சுற்றில் தகுதி பெறுகிறார் லிங்கேசன். இவர் பிரபல சூப்பர் மாளான நடிகை தியாவின் தீவிர ரசிகராக உள்ளார். விளம்பரப்படங்களில் அவருடைய துணை நடிகர் ஜானுடன் ஏற்பட்ட பாலியல் தகராறு காரணமாக அவருக்கு வரவேண்டிய விளம்பர வாய்ப்புகளை தடுக்கிறார் ஜான். 

            இதனால் மனமுடைந்த தியா தனக்கான புது விளம்பர துணையை தேடுகிறார். இதன் நடுவில் லிங்கேசனுக்கும் தியாவிற்கும் இடையில் சந்திப்பு நிகழ்கிறது. தியா லிங்கேசனை தன்னுடன் துணையாக விளம்பரங்களில் நடிக்க சம்மதிக்க வைக்கிறார். மிஸ்டர் இந்தியா போட்டி நடைபெறும் அதே நேரத்தில் சீனாவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. எனினும் தியா மீது இருந்த காதலால் தனது இலட்சியத்தை விட்டு தியாவுடன் நடிக்க ஒப்புக்கொள்கிறார். 

            விளம்பர படங்களில் தியாவிற்கும், லிங்கேசனுக்கும் ஒஸ்மா ஜாஸ்மின் என்னும் திருநங்கை பெண் மேக்கப் பணியாளராக பணியாற்றுகிறார். தியாவின் மேலிருந்த காதலால் விளம்பர பட நடிப்பின் போது லிங்கேசன் தியாவைப் பார்த்து வெட்கப்படுகிறார். இதனால் முதற் கட்ட விளம்பர படப்பிடிப்பு தோல்வியடைகிறது. தனது இயக்குனரின் ஆலோசனையின் பேரில் லிங்கேசனை காதலிக்குமாறு  நடிக்கும்படி தியாவிடம் கூறப்படுகிறது. விளம்பர பட நடிப்பிற்காக தியாவும் லிங்கேசனை காதலிப்பது போல் நடிக்கிறார். 

            அதன் பிறகு விளம்பர படப்பிடிப்பு எந்த பாதிப்புமின்றி நடந்து முடிகிறது. பின்னர் தான் காதலிக்கவில்லை என்ற உண்மையை லிங்கேசனிடம் தியா கூறுகிறாள். இதனையறிந்த லிங்கேசன் பிறகு மாடலிங் துறையில் கவனம் செலுத்துகிறார். இவர்கள் இருவரும் படிப்படியாக ம் மாடலிங் துறையில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். நாட்கள் செல்ல செல்ல லிங்கேசனின் மீது தியாவிற்கு காதல் மலர்கிறது. பிறகு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொள்கின்றனர்.

            இவ்வாறு பாடி பில்டராக தனது பயணத்தை தொடங்கிய லிங்கேசன் மாடலிங் துறையில் பெரிய நட்சத்த்திரமான ஜான் போன்ற தனக்கான எதிரிகளை உருவாக்கி கொள்கிறார். லிங்கேசன் பிரபலமடைந்து வருவதால் அவருடைய மாடலிங் வாழ்க்கை பாழடைந்து உள்ளூர விளம்பரங்களில் நடிக்க தொடங்குகிறார். லிங்கேசனிடம் காதல் வயப்பட்ட ஓஸ்மா ஜாஸ்மின் தனது உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துகிறார். அனால் லிங்கேசன் மறுத்து விடுகிறார். மேலும் தொழிலதிபர் இந்திரகுமார் அவர்களின் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி இருப்பதாகக் கூறி அவருடைய விளம்பர படத்தை நிராகரிக்கிறார் லிங்கேசன். இதனால் அவரது நிறுவனம் பெரும் இழப்பை சந்திக்கிறது. மேலும் தனது போதிய பூவைடிங் துறையில் லிங்கேசனால் நான்கு முறை தோற்கடிக்கப்பட்ட பாடிபில்டர் ரவி லிங்கேசனை பழிவாங்க திட்டங்களை தீட்டுகிறார். இவ்வாறு இவ்வரிகள் நான்கு பெரும் இணைந்து லிங்கேசனை பழிவாங்க முயற்சிகளை எடுக்கின்றனர்.

            திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, லிங்கேசன் மெதுவாக முடி மற்றும் பற்கள் இழப்பு மற்றும் தோல் சிதைவு ஆகியவற்றை உணரத் தொடங்குகிறார். தியாவின் குடும்பத்தின் பாதுகாவலராக இருக்கும் தனது நண்பரான வாசுதேவனுடன் இது குறித்து கலந்தாலோசிக்கிறார் . லிங்கேசன் ஒரு கொடூரமான மற்றும் குணப்படுத்த முடியாத மரபணு நோயால் அவதிப்படுவதாகக் கூறுகிறார். இதனால் லிங்கேசனுக்கு முன்கூட்டியே வயதானது போல தோற்றம் அவரது உடலில் ஏற்பட்டு முதுகில் கூன் விழுந்து லிங்கேசனின் நிலை மோசமடைகிறது. இதனால் மனமுடைந்த லிங்கேசன் தனது காதலி தியாவிற்கு தன்னை பற்றிய உண்மைகள் எதுவும் தெரிந்துவிட கூடாது என நினைக்கிறார். 

            அதனால் தற்போதைய நிலையில், ஒரு கார் விபத்தில் அவரது மரணத்தை போலியாக ஏற்படுத்திக் கொண்டு லிங்கேசன் பொதுமக்களின் பார்வையில் இருந்தும், தியாவின் வாழ்க்கையிலிருந்தும் மறைந்து போகிறார். அவர் உயிருடன் இருக்கிறார் என்ற விசியம் அவரது நண்பர் பாபுவிற்கும், வாசுதேவனுக்கும் மட்டுமே தெரியம்படி பார்த்துக் கொள்கிறார் லிங்கேசன். மேலும் தியாவின் கடந்த கால மற்றும் தற்போதைய நிலைமையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரே நபர் வாசுதேவன் என்பதால் தியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு லிங்கேசன் வாசுதேவனிடம் வேண்டிக் கேட்கிறார். இதன் பிறகு பெரியாரால் சம்மதம் மீண்டும் நிச்சயிக்கப்படுகிறது. 

            தியாவின் திருமணத்திற்கு முன்னதாக, திருவேங்கடம் என்ற மற்றொரு மருத்துவரை சந்திக்கிறார் லிங்கேசன். மேலும் அவர் வாசுதேவனின் கூற்றுகளுக்கு மாற்றாக அவருடைய வியாதியைப் பற்றி லிங்கேசனுக்கு விளக்குகிறார். அவர் H4N2 influenza என்னும் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் இது "I" என்னும் வைரஸால் ஊசி மூலம் மட்டுமே பரவும் கொடிய வியாதி எனவும் தெரிந்து கொள்கிறார் லிங்கேசன். அதோடு ஜான், ஒஸ்மா, இந்திரகுமார், ரவி மற்றும் அவரது நண்பன்  வாசுதேவன் கூட்டணியாக செயல்பட்டு லிங்கேசனை பழிவாங்கியதை உணர்கிறார். மேலும் தியா ஒரு பள்ளி மாணவியாக இருந்த போதிலிருந்தே வாசுதேவனுக்கு தியா மீது ஒரு தீராத காமம் இருந்ததையும் அறிகிறார். அதன்பிறகு அவர்களுடன் சண்டையிட்டு கயிற்றால் காட்டப்படுகிறார் லிங்கேசன். அதன்பிறகு கோபமடைந்த லிங்கேசன் தப்பித்து தியாவின் திருமண நாளில் அவளை கடத்தி அவருடைய அடயாளத்தை வெளிப்படுத்தாமல் யாருக்கும் தெரியாத ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைக்கிறார். 

            தனது நண்பன் பாபுவின் உதவியுடன், லிங்கேசன் தன்னை சிதைத்தவர்களைக் கொல்லாமல் பழிவாங்க முடிவு செய்கிறார். கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாக்கி பாடி பில்டர் ரவியை முதலில் பழி வாங்குகிறார். பின்னர் அவர் மேக்கப் நிபுணர் ஒஸ்மா உபயோகிக்கும் அவரது பேஸ்ட்டில் தான் தயாரித்த நச்சு கலந்த பேஸ்டை மாற்றுகிறார் லிங்கேசன். இதனால் ஓஸ்மாவிற்கு உடல் முழுவதும் முடிகள் முளைத்து கொடூரமான தோற்றத்துடன் மாறுகிறார். அதன் பின்னர் இந்திரகுமாரை அவர் தனியாக ஓய்வு எடுக்கும் பொழுது தேனீக்களால் தாக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகிறார். அதன் பின் ஓடும் ரயிலில் ஜானுடன் சண்டையிட்டு மின்சாரத்தால் ஜான் தாக்கும்படி செய்து அவரை பழி வாங்குகிறார். 

            இறுதியாக நண்பனாக நடித்து ஏமாற்றிய வாசுதேவனை அவருக்கே தெரியாமல் அவர் உடம்பில் வைரஸை செலுத்திகிறார் லிங்கேசன். இதனால் அவரது உடல் முழுதும் வீக்கமடைந்து பாக்க அருவெறுப்பான தோற்றத்துடன் மாறுகிறார் வாசுதேவன். இவ்வாறு தனது பழிவாங்கலை முடித்த பிறகு தியாவிற்கு தனது உண்மை நிலையை உணர்த்துகிறார் லிங்கேசன். முதலில் அதிர்ச்சியடைந்த தியா பிறகு லிங்கேசனை ஏற்றுக்கொள்கிறார். அதன்பிறகு இருவரும் தனியாக ஒரு ஊரில் வாழ தொடங்குகின்றனர். லிங்கேசன் தனது இயல்பற்ற நிலைக்கு ஆயுர்வேத சிகிச்சை, யோகா மற்றும் பிசியோதெரபி போன்ற பல சிகிச்சைகளை மேற்கொண்டு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்.

விமர்சனம் :

            தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி இயக்குனராக கடந்த ஆண்டுகளுக்கும் மேல் வளம் வருபவர் இயக்குனர் ஷங்கர். நண்பன் எந்திரன் மற்றும் சிவாஜி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பிறகு நடிகர் விக்ரமை வைத்து "ஐ" என்னும் வித்யாசமான படத்தை இயக்க முடிவு செய்தார் ஷங்கர். இப்படத்தில் நடிகையை தேர்வு செய்வதற்கு ஒரு போரே நடந்திருக்கிறது என்றே கூறலாம். 

அதாவது ஏப்ரல்-2012 அன்று விக்ரம் "I" படத்தில் நடிப்பார் என முடிவு செய்யப்பட்டது. அதன்பின் நடிகையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பபட்டதாக தெரிகிறது. அதன்பின் கஜினி திரைப்படத்தில் நடித்த அசினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் பிரபல நடிகை தீபிகா படுகோனையும் நாடியுள்ளனர் படக்குழு. ஆனால் தீபிகா படத்தில் நடிக்க மறுத்துவிடவே பின்னர் சமந்தா ரூத் பிரபு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அனால் தேதி பிரச்சனைகள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. 

            இறுதியாக எமி ஜாக்ஸனை படத்தில் நடிக்க சுமார் 5.75 மில்லியன் கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். ரவீனா ரவி அவருக்கு தமிழில் டப்பிங் செய்தார். இவருடன் மேலும் சாந்தனம், உபேன் படேல், சீனிவாசன் [39] மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்யப்பட்டனர். ஒரு முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், மறைந்த சிவாஜி கணேசனின் மூத்த மகனுமான ராம்குமார் கணேசனும் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்க நடிகர்களுடன் சேர்க்கப்பட்டார். மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் ஓஜாஸ் எம்.ராஜனி, முன்பு ஷங்கருடன் அந்நியன் திரைப்படத்தில் பணிபுரிந்தார், எமி ஜாக்சனுக்கான மேக்கப் ஆர்ட்டிஸ்டாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த படத்தில் ஒரு திருநங்கை கலைஞராகவும்,ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லியாகவும்  நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. 

            அந்நியன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சங்கர் விக்ரமுடன் "ஐ" என்னும் திரைப்படத்தில் இணைவதால் படத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து காணப்பட்டன. இந்த படத்தின் மூன்று வருட உழைப்பு நல்ல பயனை தந்திருக்கிறது என்ரே கூறலாம். குறிப்பாக படத்தில் நடிகர் விக்ரம் அவர்களின் கடின உழைப்பும் படத்திக்காக அவருடைய அர்ப்பணிப்பும் பாராட்டப்பட வேண்டியது. ஒரு பாடி பில்டராக இருந்து மாடலாக மாற அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் எதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது. 

            ராம் குமார், சந்தனம், சுரேஷ் கோபி மற்றும் பலரும் படத்தில்  தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். ரஹ்மானுடைய பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. ஹன்ச்பேக் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் இந்திய சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம்  

            எனினும் சில எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. அதாவது படம் பெரிய பட்ஜெட் அளவிற்கு தகுதியானது இல்லை என்றும் மேலும் சில காட்சிகள் யூகிக்கக்கூடியதாகவும் உள்ளது. ஹன்ச்பேக் விக்ரம் தேனீக்களுடன் ராம் குமாரைப் பழிவாங்கும் விதம் அந்நியன் படத்தில் வரும் தொழிற்சாலை உரிமையாளரை பூச்சிகளால் கொல்லும் காட்சியை போன்றே அமைக்கப்பட்டுள்ளது.மேலும் சில இடங்களில் ரகுமானின் இசை சரியாக பொருந்தவில்லை. 

            மேலும் கூன் விழுந்த மனிதன் எப்படி வேகமாக குதித்து ஓட முடியும் மற்றும் எதிரியை வேகமாக துரத்த முடியும் மற்றும் வண்டியில் இருந்து இன்னொரு வண்டிக்கு மாற முடியும்? போன்ற பகுதிகளில் ஷங்கர் தோல்வியடைந்துள்ளார் என்றே கூறலாம். மேலும் இந்த படத்தில் முக்கியமான வைரஸாக கருதப்படும் "I" (H4N2) வைரஸ் பற்றிய குறிப்பு மிகக் குறைந்த இடங்களிலே காட்டப்படுகிறது. 





Post a Comment

Previous Post Next Post