பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் சிகிச்சை பலனின்றி காலமானார் | Famous Bollywood actor Dilip Kumar has passed away

            இந்திய திரையுலகில் முன்னணியில் இருக்கும் பாலிவுட் திரையுலகம் பல்வேறு வெற்றிப்படங்களையும் , பல பிரபல நடிகர், நடிகைகளையும் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் Jwar Bhata என்னும் திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் திலிப் குமார் (Dilip Kumar). அவருடைய ஆரம்ப கட்ட திரைப்படங்கள் பாலிவுட் திரையுலகில் பெரிதாக வெற்றியை அவருக்கு பெற்றுத் தரவில்லை. அதன் பின் 1947-ஆம் ஆண்டு Jugnu என்னும் படத்தில் நடிகை Noor Jehan- உடன் நடித்திருந்தார். இந்தப்படம் box office-ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து அதன்பின் அவர் நடித்த Shaheed மற்றும் Mela போன்ற படங்களும் அவருக்கு அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றுத் தந்தன. 

            மேலும் இவர் 1950- களில்  Jogan (1950), பாபுல் (1950), ஹல்ச்சல் (1951), தீடர் (1951), தரானா (1951), தாக் (1952), சங்தில் (1952), Shikast (1953), அமர் (1954), Uran Khatola (1955), இன்சானியாத் (1955), தேவதாஸ் (1955), நயா தாவுர் (1957), யாஹுதி (1958), மதுமதி (1958) மற்றும் பைகாம் (1959) போன்ற பத்திற்கும் மேற்பட்ட Box office திரைப்படங்களைக் கொடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தார்.  இவருடைய நடிப்பைப் பாராட்டி திரையுலகினர் இவரை "Tragedy King" என்ற பெயரோடு அழைத்தனர். சோகமான கதாபாத்திரங்கள் அதிகமாக ஏற்று நடித்ததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவர் அதன்பின் மருத்துவரிடம் ஆலோசனைகளை பெற்று லேசான கதாபாத்திரங்களில் மட்டும் ஏற்று நடிக்கத் தொடங்கினார்.

            பாலிவுட் திரையுலகில் முதன்முதலில் சிறந்த நடிகருக்கான Filmfare விருதை Daag என்னும் படத்திற்காக பெற்ற இவர் அதன் பின் ஏழு முறை அந்த விருதைப் பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். மேலும் இவருடைய காலகட்டத்தில் அப்போது முன்னணி நடிகைகளாக இருந்த Vyjayanthimala, Madhubala, Nargis, Nimmi, Meena Kumari மற்றும் Kamini Kaushal போன்ற அனைத்து நடிகைகளுடனும் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் 1950-களில் அவர் நடித்திருந்த 9 வெற்றிப் படங்கள் அப்போது box office-ல் அதிக வசூல் படைத்த முதல் 30 திரைப்படங்களில் இடம் பெற்றிருந்தன. 

            மேலும் இவர் படங்களில் நடித்துக் கொண்டே அப்போது முன்னணி நடிகையாக வளம் வந்த மதுபாலா என்பவருடன் நீண்ட காலம் உறவில் இருந்தார். எனினும் அவரை திருமணம் செய்யாமல் பிரபல நடிகையான சாய்ரா பானு என்பவரை 1966-ஆம் ஆண்டு மணந்து தனது மனைவியுடன் மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்தார்.

             1970-களில் இவர் நடித்த Dastaan  மற்றும் தனது மனைவியுடன் சேர்ந்து நடித்த Gopi, Sagina Mahato மற்றும் அவர் மூன்று வேடங்களில் நடித்த Bairaag போன்ற படங்கள் box office-ல் எதிர்பார்த்த அளவில் அவருக்கு வெற்றியைப் பெற்று தரவில்லை என்ற போதிலும் அவர் ஏற்று நடித்த நடித்த கதாபாத்திரங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. எனினும் அப்போது முன்னணி நடிகர்களாக வளம் வந்த ராஜேஷ் கன்னா மற்றும் சஞ்சீவ் குமார் போன்றோர்களின் சிறப்பான நடிப்பால் அதிக அளவு பட வாய்ப்புகளை இழந்த இவர் 1976-ஆம் ஆண்டிற்கு பிறகு பாலிவுட்டில் இருந்து  5 வருட இடைவெளி எடுத்துக்கொண்டார். அதன்பின் 1981-ஆம் ஆண்டு Kranti என்னும் வெற்றி படத்தில் நடித்து பாலிவுட்டிற்கு re-entry கொடுத்தார். அதன்பின் Shakti, Mashaal மற்றும் Saudagar போன்ற வெற்றி படங்களையும் தந்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார்.

            இவருடைய நடிப்பை பாராட்டி 1994-ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கி இவரைப் பெருமைப்படுத்தியது. மேலும் 1991-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும், 1998-ஆம் ஆண்டு நிஷன்-இ-இம்தியாஸ் விருதையும் மற்றும் 2015-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்று ஒரு இந்திய நடிகராக அதிக விருதுகளைப் பெற்றவர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.   

            இவ்வாறு திரையுலகில் பல சாதனைகளை படைத்த 98 வயதாகும் இவர் கடந்த கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 30 அன்று திலீப் குமார் மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 07:30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார்  உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தற்போது ஒட்டு மொத்த திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post