தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தோடு வளம் வருபவர் நடிகர் சூர்யா. மற்ற நடிகர்களைப்போல் அல்லாமல் மிகவும் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் இவர் தற்போது வெற்றிமாறனுடன் "வாடிவாசல்" என்னும் திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன. வெற்றிமாறன் தற்போது சூரியுடன் "விடுதலை" என்னும் படத்தை இயக்கி வருவதால் இப்படத்திற்கு பிறகு வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் மணிரத்னம் Netflix வலைத்தளத்துடன் இணைந்து ஒரு web series தயாரித்து வெளியிடுவதாக திரையுலகில் பேசப்பட்டு வந்தது. அதாவது ஒன்பது இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து ஒன்பது விதமான ரசனைகளுடன் Navarasa என்னும் வலைத்தொடரை இயக்கப்போவதாக அதிகார பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த ஒவ்வொரு தொடரிலும் தமிழ் திரையுலகை சார்ந்த பல்வேறு முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதர்வா, பிரசன்னா மற்றும் பலரும் நடிக்க உள்ளனர்.
அதோடு கடந்த சில தினங்களுக்கு முன் படத்தின் தலைப்புகளையும் நடிகர் நடிகைகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் படக்குழுவினர். இந்த செய்தி வெளியானதும் திரையுலகில் வைரலாக தொடங்கிவிடத்து. மேலும் சூர்யா 12 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் "வாரணம் ஆயிரம்". இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி "காதல்" என்னும் ரசனையில் இணைவதால் இந்த வலை தொடரின் மேலுள்ள எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளிவரும் "கிட்டார் கம்பி மெலே நின்ரு" என்னும் படத்தில் அவர் நடிகை பிரயாகா மார்ட்டினுடன் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஒன்பது வகையான தமிழ் ரசனைகளான கோபம், இரக்கம், தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, அன்பு, அமைதி மற்றும் அதிசயம் போன்ற வித்யாசமான ரசனைகளுடன் வலை தொடர் எடுக்கப்பட்டு வெளியாகவுள்ளது.
ரௌத்திரம்
"கோபம்" என்னும் ரசனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாகத்தை அரவிந்த் சுவாமி இயக்கியுள்ளார். இந்த பாகத்தில் ரித்விகா, ஸ்ரீ ராம், மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர்.
எதிரி
"இரக்கம்" என்னும் ரசனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாகத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். இந்த பாகத்தில் விஜய் சேதுபதி, ரேவதி, பிரகாஷ் ராஜ் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிக்கின்றனர்.
துணிந்த பின்
"தைரியம்" என்னும் ரசனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாகத்தை சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார். இந்த பாகத்தில் அதர்வா, அஞ்சலி மற்றும் கிஷோர் ஆகியோர் நடிக்கின்றனர்.
பாயாசம்
"வெறுப்பு" என்னும் ரசனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாகத்தை வசந்த் இயக்கியுள்ளார். இந்த பாகத்தில் டெல்லி கணேஷ், ரோகினி மற்றும் அதிதி பாலன் ஆகியோர் நடிக்கின்றனர்.
Inmai
"பயம்" என்னும் ரசனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாகத்தை ரதிந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். இந்த பாகத்தில் சித்தார்த் மற்றும் பார்வதி திருவோத்து ஆகியோர் நடிக்கின்றனர்.
Summer of '92
"சிரிப்பு" என்னும் ரசனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாகத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்த பாகத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடமுடி வேணு மற்றும் மணிகுட்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.
கிட்டார் கம்பி மெலே நின்று
"காதல்" என்னும் ரசனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாகத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த பாகத்தில் சூர்யா மற்றும் பிரயாகா மார்ட்டின் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
"அமைதி" என்னும் ரசனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாகத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த பாகத்தில் விக்கி, பாபி சிம்ஹா மற்றும் சனந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
Project Agni
"அதிசயம்" என்னும் ரசனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாகத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த பாகத்தில் அரவிந்த் சுவாமி, பிரசன்னா மற்றும் பூர்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனோ அலையின் காரணமாக தாமதமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைந்தது. இந்த வலை தொடரின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அடுத்த ஆகஸ்ட் மாதம் Netflix இணைய தளத்தில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.
