காலி தனது குடும்பத்தை பழிவாங்கிய சிங்காரத்தை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதை காதல், நகைச்ச்சுவை மற்றும் சண்டடைக்காட்சிகள் நிறைந்த படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
நடிகர்கள் :
ரஜினிகாந்த் - காலி
விஜய் சேதுபதி - சிங்காரின் மகன்
த்ரிஷா - சரோ
சிம்ரன் - மங்களம்
சசிகுமார் - மாலிக்
நவாசுதீன் சித்திகி - சிங்காரம்
பாபி சிம்ஹா - மைக்கேல்
மேகா ஆகாஷ் - அனு
மாலவிகா மோகனன் - பூங்கோடி
காலி ஒரு வயதான முதியவர். அவர் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதி வார்டனாக பணியில் சேர்கிறார். அந்த ஊரின் தலைவரான ஞானம் என்பவற்றின் மகனான மைக்கேல் தலைமையில் கல்லூரியில் பல நடைமுறைக்கு புறம்பான நிகழ்வுகள் நடப்பதை அறிகிறார் காலி. மேலும் மைக்கேலின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும்போது இவர்களுக்கு இடையே , மோதல் நிகழ்கிறது.
கல்லூரியில் அன்வர் மற்றும் அனு ஆகியோரின் காதல் பிடிக்காமல் மைக்கேல் அவர்களுடன் மோதலில் ஈடுபடும்போது காலி அவர்களை காப்பாற்றுகிறார். இதனால் இவர்கள் காளியுடன் நெருக்கமாக பழகுகின்றனர். மேலும் அனு என்பவர் பிரானிக் மருத்துவரான மங்களம் என்பவற்றின் மகள் ஆவார். இவர்களின் காதலை புரிந்து கொண்ட காலி மங்கலத்திடம் பேசி இவர்களின் காதலுக்கு சம்மதம் வாங்குகிறார். இதற்கிடையில் மங்கலத்திற்கும் காளிக்கும் இடையே காதல் மலர்கிறது.
அனுவின்மேல் ஆசைப்படும் மைக்கேல், அன்வருடனான காதல் உறவைக் கேட்டு கோபப்படுகிறார். அவர் அவர்களைத் துன்புறுத்த முயற்சிக்கும்போது காலியால் தண்டிக்கப்பட்டு அன்வர் மற்றும் அவரது நண்பர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை அன்வர் தனது மொபைல் போனில் பதிவு செய்து இணையதளத்தில் பரப்புகிறார். இந்த வீடியோ உத்திரபிரதேசத்தில் உள்ள பெரிய அரசியல்வாதியான சிங்காரத்தின் மகன் லோக்கல் ரவுடி ஜித்துவால் பார்க்கப்படுகிறது. மேலும் அன்வர் மற்றும் அவரது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பல அறியப்படாத காரணங்களுக்காக அன்வரை கொலை செய்ய ஆட்களை ஊட்டிக்கு அனுப்புகின்றனர்.
அதே சமயம், சஸ்பென்ஷனில் அவமானப்படுத்தப்பட்ட மைக்கேல், காளியை அடிக்க திட்டம் தீட்டி தனது ஆட்களை அனுப்புகிறார். அனால் காளிக்கும் சிங்காரத்தின் ஆட்களுக்கும் இடையிலான சண்டையில் அவரும் அவரது ஆட்களும் சிக்கியுள்ளதால் மைக்கேலின் திட்டம் தோற்கடிக்கப்படுகிறது. காளி சிங்காரத்தின் ஆட்களை அடக்கி, மைக்கேல் மற்றும் ஊர் தலைவர் ஞானத்தின் மரியாதையைப் பெறுகிறார், அதைத் தொடர்ந்து அன்வர் தனது கடந்த காலத்தைப் பற்றி காலி கூற அறிந்து கொள்கிறார்.
அன்வர், காளியின் நெருங்கிய நண்பராக இருந்த மாலிக்கின் மகன். காளியின் உண்மையான பெயர் பேட்டவேலன் அல்லது பேட்ட என்பதும், அவர் மதுரை மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதர் என்பதும் அன்வர் அறிகிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மாலிக் ஒரு நண்பருடன் தேவாரம் மற்றும் சிங்காரம் ஆகியோரின் மணல் கடத்தல் பற்றி பேசுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இதனால் தேவாரம் கைது செய்யப்படுகிறார்.
மாலிக் அவரது பக்கத்து வீடு பெண் பூங்கொடியை காதலித்து வருகிறார். அனால் கல்யாணத்திற்கு முன்கூட்டியே பூங்கொடி கருத்தரிக்கிறாள். பிறகு திருமணத்திற்கு குடும்ப பகை காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கும் பேட்ட அவர்கள் அப்துல் அய்யாவை "மாலிக் தந்தை" கொன்றதால் அவர்களுடன் குடும்பமாக இருப்பது அவமானமாக இருக்கும் என்று கூறுகிறார். எனினும் தனது நண்பன் மாலிக்கிற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். அவரும் அவரது மனைவி சரஸ்வதி என்கின்ற சரோவும் பூங்கோடியின் தந்தை ராஜபாண்டியை பூங்கோடியை மாலிக் என்பவரை திருமணம் செய்து கொள்ளும்படி சமாதானப்படுத்துகின்றனர்.
ராஜபாண்டியின் இரண்டு மகன்களான தேவாரம் மற்றும் சிங்காரம் ஆகியோர் பூங்கொடிக்கு சொத்து மாற்றப்படுவதை எதிர்த்து அவரது தந்தை ராஜபாண்டியை கொலை செய்கின்றனர். இந்நிகழ்வை அறிந்த பேட்ட குடும்பத்தினர் இறுதிச் சடங்கிற்கு செல்கின்றனர். அங்கு தேவாரத்தின் ஆணவமிக்க பேச்சால் கோபமடைந்த பேட்ட தேவாரத்தை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்கிறார். மேலும் சிங்காரத்தை ஊரை வீட்டையே விரட்டியடிக்கிறார். தான் ஊரை விட்டு விரட்டியடிக்கப்பட்டதற்கும், தனது சகோதரர் தேவாரத்தை கொன்றதற்கும் பழிவாங்கும் விதமாக பூங்கொடியின் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது குண்டுவெடிப்பு திட்டத்தை செயல்படுத்துகிறார்.
இந்த குண்டுவெடிப்பில் மாலிக் சரோ மற்றும் சரோவின் மகன் சின்னா ஆகியோரும் கொல்லப்படுகின்றனர். பின்னர் பூங்கொடி உயிருடன் இருப்பதாய் அறிந்த பேட்ட அவளைக் காப்பாற்றி அழைத்து செல்கிறார். மேலும் பூங்கொடிக்கு அன்வர் என்ற ஒரு குழந்தை பிறக்கிறது. மேலும் சிங்காரத்திடமிருந்து அவர்களை பாதுகாக்க ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இந்தக் கதையைக் கேட்டதும், பேட்ட மற்றும் அன்வர், மைக்கேலின் உதவியாளர்களுடன் சேர்ந்து, சிங்காரத்தை பழிவாங்க உத்தரபிரதேசத்திற்கு புறப்படுகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில், பேட்ட , அன்வர் மற்றும் அவர்களது கூட்டணி ஜித்துவை எதிர்கொள்கிறார்கள். ஜித்து தனது தந்தையும், பேட்டயும் எதிரிகள் என்பதை அறிந்த பின்னர் இருவரையும் கொல்ல முயல்கிறார். பின்னர் பேட்ட தனது ஆட்காளுடன் சேர்ந்து ஜித்துவை தன்பக்கம் சேர்க்க சாதி திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர். மேலும் அடியாட்களை ஏற்பாடு செய்து ஜித்துவை சிங்காரத்தின் ஆட்கள் தாக்குவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி ஜித்துவை சிங்காரத்திற்கு எதிராக திசை திரும்புகின்றனர். மேலும் குண்டுவெடிப்பில் இறக்காத உன்னை சிங்காரம் தத்தெடுத்து அவரின் தேவைக்கேற்ப உன்னை பயான்படுத்திக் கொள்கிறார் எனவும் கூறி நம்பவைக்கின்றனர். இதனால் கோபமடைந்த ஜித்து பேட்டாயுடன் சேர்ந்து சிங்காரத்தை கொல்ல அவரது அரண்மனைக்குள் நுழைகின்றனர்.
ஜித்துவிற்கு பழக்கப்பட்ட இடம் என்பதால் அரண்மனைக்குள் நுழைந்தவுடன் அனைவரையும் எளிதில் சுட்டு வீழ்த்துகின்றனர். இறுதியில் சிங்காரத்தையும் கொலை செய்கின்றனர். இதை தொடர்ந்து கதையில் மற்றொரு திருப்பம் ஏற்படுகிறது. அதாவது ஜித்து உண்மையில் சிங்காரத்தின் மகன் என்பதையும் சிங்காரத்தை பழிவாங்கவே ஜித்துவை, சின்னா என பொய் சொல்லி நம்ப வைத்ததாகவும் பேட்ட தரப்பினர் கூறுகின்றனர். அதன்பின் பேட்ட துப்பாக்கியை ஜித்துவை நோக்கி காட்டுகிறார். பின்னர் துப்பாக்கி சத்தத்துடன் படம் நிறைவடைகிறது.
விமர்சனம் :
ரஜினிகாந்த் சில காட்சிகளுக்கு கொண்டு வரும் அவருடைய தீவிரமான நடிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. மேலும் ஒரு அறுபத்தெட்டு வயது மனிதர் தனது தீவிரமான முகபாவனைகளாலும், அதிரடி காட்சிகளாலும் கூட திரையில் இவ்வளவு நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்கு, அவரது அர்ப்பணிப்பும், நடிப்பின் மேலுள்ள அவரது எல்லையில்லா ஈடுபாடுமே காரணம் என்று தான் கூற வேண்டும்.
கல்லூரியில் பேட்ட தன்னை எதிர்த்து வரும் கூட்டங்களை தனி ஆளாக நின்று சமாளிப்பது மிகவும் மாஸாக பின்னணி இசையுடன் கட்டப்பட்டிருந்தது. இந்த காட்சிகளில் ரஜினியின் முந்தைய கால ஸ்டைலான நடிப்பை பார்க்க முடிந்தது. மேலும் மைக்கேல் கூட்டாளிகளுடன் பேட்டையிடம் சண்டை போடுவது மற்றும் இறுதியில் அவர்களுடன் கூட்டணி சேர்ந்து உதிர்ப்பிரதேசத்திற்கு சிங்காரத்தை பழிவாங்க புறப்படுவது போன்ற காட்சிகள் எதிர்பாராத திருப்பங்களாக அமைந்திருந்தன. ஃப்ளாஷ்பேக் குண்டு வெடிப்பு காட்ச்சிகளில் நவாஸுதீன் நடிப்பு திரையரங்குகளில் கைதட்டல்களை பெற்று மக்களால் பெரிதாக பாராட்டப்பட்டுள்ளது.
படத்தில் சில காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன. அனால் சில காட்சிகள் படத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அத்தகைய காட்சிகளில் ரஜினிகாந்த் அவர்களின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவில்லை.
இளம் இசையமைப்பாளர் அனிருத் தனது இசையின் மூலம் பேட்ட படத்திற்கு வலு சேர்த்துள்ளார். நிறைய சண்டைக்கு காட்சிகளில் பின்னணி இசை அசத்தலாக பொருந்தியுள்ளது.மேலும் இப்படத்திற்கு தன்னுடைய சிறந்த இசையை அளிப்பதற்காக பாடுபட்டுள்ளார் என்றுதான் கூறவேண்டும்.
விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அவருக்கு பொருத்தமான கதை அமையவில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் படத்தில் அவருடைய காட்சிகள் மிக குறைவு. மேலும் அவருடைய முந்தய படங்களான விக்ரம்வேதா, சீதகாதி போன்ற படங்களில் அவருக்கு வழங்கிய முக்கியத்துவம் இந்த படத்தில் பெரிதாக வழங்கப்படவில்லை.
படத்தில் நவாசுதீன் சித்திக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அனால் படத்தில் அவருடைய நடிப்பிற்கு உரித்தான மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. படத்திற்கு ஹீரோயின்கள் முக்கியத்துவம் அளிக்கப்படாததுஒரு மைனஸ் என்ரே கூறலாம். ஏனெனில் திரிஷாவும் சிம்ரனும் ஏதோ கடமைக்கு நடிப்பது போல் கட்டப்பட்டிருந்தது.
அதிரடி காட்சிகள் ரஜினிகாந்தின் நடை , பாவனைகள் மற்றும் நல்ல கேமரா வேலை, எதார்த்தமான போன்றவை மக்களை பெரிதும் ஈர்த்துள்ளது என்ரே கூறலாம் . ரஜினிகாந்த் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம் அவருடைய வயதிற்கு பொருத்தமாக அமைந்திருந்தது.