வீடு தேடி வந்த ராம் சரண் - விருந்து வைத்து அசத்திய ஷங்கர் | Actor Ram charan visits Director shanker's house

            தமிழ் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரமாண்டமான திரைப்படங்களை எடுத்து அதனை வெற்றிப்படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் ஷங்கர். இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவ்வப்போது சிறுவேடங்களில் நடிகராகவும் திரையுலகில் பணியாற்றி இருக்கிறார். மேலும் ஒரு முறை தேசிய விருதையும் நான்கு முறை Filmfare விருதையும் பெற்றுள்ளார். இவர் இயக்கிய Gentleman, Kadhalan, Anniyan, Mudhalvan, Enthiran போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் திரையுலகில் ஏற்படுத்திக் கொண்டவர்.

            இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு தான் இயக்கிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் kamal hasan, Kajal Aggarwal, Siddharth, Rakul Preet Singh, Priya Bhavani Shankar, Bobby Simha, Samuthirakani போன்ற பல்வேறு முன்னணி பிரபலங்களும் நடிக்கின்றனர். இப்படம் கோரோனோ இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக தாமதப்படுத்தப்பட்டாலும் இயக்குனர் ஷங்கர் மீது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Lyca Productions  நீதிமன்றத்தில் படத்தை கூடிய விரைவில் முடித்து தருமாறும் படம் முடியும் வரை வேறு படம் எதிலும் பணி செய்ய கூடாது என்றும் வழக்கு தொடர்ந்தது. எனினும் அவ்வழக்கை நிராகரித்த நீதிமன்றம் இணக்கமாக பேசி தீர்க்குமாறு ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு நீதி மன்றம் உத்தரவிட்டது. 

            அதோடு கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவருடைய மற்றொரு படமான விக்ரம் படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்தியன்-2 படத்தின் தாமதத்திற்கு கமல்ஹாசன் மற்றும் லைகா ஆகியோரை ஷங்கர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் தெலுகு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் ராம் சரண். இவர் தற்போது Junior NTR உடன் RRR என்னும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஏறக்குறைய இவருடைய பாகம் முடிந்து விட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் ஒரு படம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. 

            இப்படத்தை குறித்து பேசுவதற்காக கடந்த ஞாயிறு அன்று ராம் சரண் மற்றும் தில் ராஜு ஆகியோர் ஷங்கர் அவர்களின் வீடு தேடி சென்றுள்ளனர் வந்தவர்களை தமிழ் பண்பாட்டுடன் வரவேற்ற இயக்குனர் ஷங்கர், அவர்களுக்கு விருந்தளித்து அசத்தியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. அதோடு தன்னுடைய Twitter பக்கத்தில் மூவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ராம் சரண் "உங்கள் வீட்டிற்கு வந்தபோது உங்களுடைய குடும்பத்தினர் அளித்த விருந்தும், உபசரிப்பும் மிக அற்புதம்" என தெரிவித்து தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இவருக்கு பதிலளிக்கும் விதமாக, "உங்களுக்கு விருந்தளிப்பது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார். 

            இந்நிலையில்  நடிகர் ராம் சாரணை வைத்து இயக்கும் RC15 படத்தில் முழு கவனத்தையும் ஷங்கர் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. சண்டை மற்றும் திரில்லர் கலந்து உருவாக்கப்படும் இப்படத்திற்கு S.Thaman இசையமைப்பார் என கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள நடிகர்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. 

Post a Comment

Previous Post Next Post