நடிகர் தனுசுடன் ஜோடி சேரும் மூன்று நடிகைகள் | Raashi Khanna, Priya Bhavani Shankar and Nithya Menen will be paired with Dhanush

            தமிழில் துள்ளுவதோ இளமை என்னும் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ் (Dhanush). கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜகமே தந்திரம். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்று தான் கூறவேண்டும். எனினும் இப்படத்திற்கு பிறகு தனுஷ் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் இவரது சம்பளமும் இரண்டு மடங்கு அளவில் உயர்ந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

            2008-ஆம் ஆண்டு யாரடி நீ மோகினி என்னும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழகத்தில் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் மித்ரன் ஜவஹர். இப்படத்திற்குப் பிறகு அவர் குட்டி, உத்தமபுத்திரன் மற்றும் மீண்டும் ஒரு காதல் கதை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் (Thiruchitrambalam) என்னும் படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன.மேலும் இப்படத்தில் தனுஷுடன் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 

நித்யா மேனன் (Nithya Menen)

            தமிழில் 180 மற்றும் வெப்பம் போன்ற படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். தமிழில் இவர் நடிகர் விஜயுடன் (vijay) நடித்த மெர்சல் (mersal) மற்றும் நடிகர் சூர்யாவுடன் நடித்த இருபத்திநான்கு (24) போன்ற படங்கள் இவருக்கு தமிழ் மொழியில் நல்ல வெற்றியை பெற்று தந்தன. இவர் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் என்னும் திரைப்படத்தில் ஒரு கதாநாயகியாக தனுசுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar)

            தமிழில் ஒரு தொகுப்பாளராக இருந்து, பிறகு சின்னத்திரையில் சீரியல்களின் மூலம் அறிமுகமாகி தற்போது திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் (Meyaadha Maan) என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமூக ஊடகங்களில்  தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் இவர் தற்போது நடித்துள்ள கசடதபற (Kasada Thapara), குதியாட்டம், ஓமன பெண்ணே, பொம்மை மற்றும் ஹாஸ்டெல் போன்ற திரைப்படங்கள் திரையரங்க ரிலீசுக்காக காத்திருக்கின்றன. மேலும் இவர் ருத்ரன், பத்து தல மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

ராஷி கண்ணா (Raashi Khanna)

            இமைக்கா நொடிகள் (Imaikkaa Nodigal) என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. தமிழில் இவருடைய படங்கள் பெரும் அளவில் வெற்றி பெறவில்லை எனினும் தெலுங்கில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.  தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான ஜெய் லவ குசா மற்றும் தோழி பிரேமா போன்ற திரைப்படங்கள் இவருக்கு தெலுங்கில் பெரும் வெற்றியை பெற்றுத் தந்தன. 

            இவர் தற்போது நடித்துள்ள அரண்மனை 3, துக்ளக் தர்பார் திரையரங்க ரிலீசுக்காக காத்திருக்கின்றன. பக்கா கமர்சியல், தேங்க்யூ சார் மற்றும் சர்தார் (Sardar) போன்ற பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.  இப்படத்தின் பூஜை ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதை இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





Post a Comment

Previous Post Next Post