ஏழு வருடங்களுக்கு பிறகு சினிமாவில் re-entry கொடுக்கும் காஜலின் தங்கை நிஷா அகர்வால் | Kajal's sister Nisha Agarwal is set to re-enter cinema after seven years

           கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். கடந்த வருடம் ஒரு தொழிலதிபரை மணந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த இவர் தற்போது  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஏய் சினாமிகா, கருங்காப்பியம், உமா மற்றும் பாரிஸ் பாரிஸ் போன்ற படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு காத்திருக்கின்றன. மேலும் இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 என்னும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

            இவருக்கு நிஷா அகர்வால் என்னும் தங்கை உள்ளார். 2010- ஆண்டில் படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், அவருடைய தங்கை நிஷா அகர்வாலும் தெலுங்கு சினிமாவில் படங்கள் நடிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். அப்போது நடிகை காஜல் நடிக்க செல்லும் படப்பிடிப்பு தளங்களுக்கு காஜல் அகர்வாலுடன், நிஷா அகர்வாலும் உடன் செல்வாராம். அப்போது பல இயக்குனர்களால் கவனிக்கப்பட்டு அவரை தங்களது படங்களில் கதாநாயகியாக நடிக்க பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நிஷா அகர்வாலை அணுகியுள்ளனர். 

            அவருக்கும் நடிப்பில் ஆர்வம் இருக்கவே 2010-ஆம் ஆண்டில் Yemaindi Ee Vela என்னும் ரொமான்டிக் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வெற்றியைப் பெற்றுத்தந்ததோடு, சமூக ஊடகங்களில் அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுத்தந்தது . அதன் பிறகு சோலோ எனும் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவருடைய நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. 

            அதன் பின்னர் தமிழில் விமலுடன் இஷ்டம் என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.  ஆனால் தமிழில் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை தரவில்லை. எனவே தமிழில் இப்படத்திற்கு இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தால் 2014-ஆம் ஆண்டு மலையாளத்தில் நடித்த கசின்ஸ் என்ற திரைப்படத்திற்கு பிறகு திருமணம் செய்ய முடிவு முடிவு செய்து தொழிலதிபரை மணந்து செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவருக்கு மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

            இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையுலகில் நடிக்க உள்ளார் நிஷா அகர்வால்.  தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் ராணா ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு வலைத்தொடரில் நடிக்கப் போகிறார்கள். இந்த வலைத்தொடரில் ராணாவுக்கு ஜோடியாக நடிகை நிஷா அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இதன் பிறகு சினிமாவிலும் பட வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க போவதாக திட்டமிட்டுள்ளாராம் நிஷா அகர்வால். மேலும் ராணா டகுபதி தற்போது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் பீம்லா நாயக் என்னும் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த வலைத்தொடர் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 


Post a Comment

Previous Post Next Post