திரைப்பட விருதுகளை அறிவித்தது IFFM - சூரரைப் போற்று படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகர் விருது | IFFM announces Film Awards - Best Actor Award for Surya for his role in the film Soorarai Pottru

            மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFM) வருடந்தோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பபடும். அந்த வகையில் 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள், வலை தொடர்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

            இந்தத் திரைப்பட விழாவில் பிரபல இந்திய திரைப்பட கலைஞர்களான அனுராக் காஷ்யப் (Anurag Kashyap), ஷூஜித் சிர்கார் (Shoojit Sircar), தியாகராஜன் குமாரராஜா (Thiagarajan Kumararaja), ஸ்ரீராம் ராகவன் (Sriram Raghavan) ஆகியோர் தொகுப்பாளர்களாக பங்கேற்றனர். அதோடு குணீத் மோங்கா, ஓனிர், ஆஸ்திரேலிய திரைப்படத் தயாரிப்பாளர் ஜெஃப்ரி ரைட் மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற ஆசிரியர் ஜில் பில்காக் போன்றோரும் நடுவர்களாக பங்கேற்றனர்.

            இந்த விழாவில் சிறந்த பன்முகத்தன்மை கொண்ட நடிகருக்கான விருது பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி (Pankaj Tripathi) அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் திரையுலகில் பல திரைப்படங்கள், வலை தொடர்கள் மற்றும் சீரியல்கள் ஆகியவற்றில் நடித்து வருகிறார். 2018-ஆம் ஆண்டில் மக்களிடையே இவர் நடித்து வெளியான மிர்சாபூர் என்னும் வலைதொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

            சிறந்த திரைப்படத்திற்கான விருது கடந்த ஆண்டு சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் OTT தளத்தில் வெளியான சூரரைப்போற்று (Soorarai Pottru) என்னும் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.  இப்படம் டெக்கான் விமான நிறுவன உரிமையாளர் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டது.  இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களும் மிகக் குறைந்த செலவில் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது மேலும் இப்படத்தில் நடித்ததற்காக தமிழ் நடிகர் சூர்யா (surya sivakumar) அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.

            சிறந்த நடிகைக்கான விருதை ஷெர்னி (Sherni) என்னும் படத்தில் நடித்ததற்காக பாலிவுட் நடிகை வித்யா பாலன் (vidya balan) அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறந்த வலைத் தொடருக்கான விருது கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக மூன்று பாகங்களை கடந்து சென்று கொண்டிருக்கும் பாலிவுட் வலைத்தொடரான மிர்சாபூர் (Mirzapur) என்னும் வலைத்தொடருக்கு வழங்கப்பட்டது .

            சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருது லுடோ திரைப்படத்தை இயக்கியதற்காக அனுராக் பாசு(Anurag Basu) என்பவருக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வலைத் தொடரில் சிறந்த நடிகர் நடிகைக்கான விருது சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பல சர்ச்சைகளைக் கிளப்பிய ஃபேமிலி மேன் 2 (The Family Man 2) என்னும் வலைத் தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாய் (Manoj Bajpayee) மற்றும் சமந்த அக்கினெனி(Samantha Akkineni) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அத்தோடு மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் (The Great Indian Kitchen) என்ற திரைப்படமும் சிறந்த திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டது.

            இந்நிகழ்ச்சியின் இயக்குனர் Mitu Bhowmick Lange வெற்றியாளர்களைப் பற்றி கூறுகையில், உலகிலுள்ள அனைத்து மக்களும் ரசித்து பார்க்கும்படி திரைப்படத் துறையில் பணியாற்றிய அனைத்து வெற்றியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தன்னுடைய உரையில் கூறினார். 

            இந்நிகழ்ச்சியில் சூரரைப்போற்று என்னும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த விருதை பெற்ற சூர்யா கூறுகையில், "நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து திரைப்படங்களும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை அளித்திருக்கின்றன. இந்தத் திரைப்படம் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்தத் திரைப்படத்திற்காக நான் பெரும் முதல் விருது இதுவாகும். எங்களுக்கு அன்பை வழங்கிய அனைத்து ரசிகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் இயக்குனர் சுதா அவர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் அவர்களுடைய பத்து வருட கனவாகும்.மேலும் இந்த திரைப்படத்தின் கதையை எழுதுவதற்கு அவர் நான்கு ஆண்டுகள் உழைத்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் சுதா இல்லாமல் 'மாறா' என்னும் கதாபாத்திரம் உருவாகி இருக்காது".

            சிறந்த நடிகைக்கான விருது பெற்ற வித்யா பாலன் கூறுகையில், "தொற்று நோயின் கால கட்டத்தில் எடுக்கப்பட்ட ஷெர்னி என்னும் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் கஷ்டமான காலகட்டத்திலும் பல தடைகளை தாண்டி இப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் அமித் மசூர்கர் (Amit Masurkar) மற்றும் தயாரிப்பாளர் அபுந்தன்டியா (Abundantia) ஆகியோருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்".

            சிறந்த பன்முகத் திறமை கொண்ட சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற பங்கஜ் திரிபாதி கூறுகையில், "இந்த விருது எனக்கு எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. என்னுடைய நடிப்பு திறமைக்காக கிடைத்த இந்த விருது எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. என்னுடைய நடிப்புத் திறமையை கண்டு பிடித்து எனக்கு இந்த விருது கிடைக்க மிகவும் முக்கிய பங்காற்றிய இயக்குனர் அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு நான் நடித்த திரைப்படங்களில் பணியாற்றிய அனைத்து இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்".

மெல்போர்ன் 2021 (IFFM 2021)  இந்திய திரைப்பட விழாவில் வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்:

சிறந்த திரைப்படம்          -  சூரரைப் போற்று (Soorarai Pottru) 

சிறந்த நடிகர்                        -  சூர்யா சிவகுமார் (surya sivakumar) 

சிறந்த நடிகை                      -  வித்யா பாலன் (Vidya Balan) 

சிறந்த இயக்குனர்            -  அனுராக் பாசு (Ludo) 

சிறந்த வலைத்தொடர்   -  மிர்சாபூர் சீசன் 2 (Mirzapur - Season 2)

வலைத்  தொடரில் சிறந்த நடிகை    -    சமந்தா அக்கினேனி (The Family Man 2) 

வலைத்  தொடரில் சிறந்த நடிகர்      -    மனோஜ் பாஜ்பாய் (The Family Man 2) 

சிறந்த குறும்படம் (Equality in Cinema) - ஷீர் கியோரமா (Sheer Qorma)

Equality in Cinema Award (Feature Film)    - தி கிரேட் இந்தியன் கிச்சன் (The Great Indian Kitchen)

சிறந்த இண்டி படம் (Best Indie Film)          -    Fire in the Mountains

(Diversity in Cinema Award)              -                        (Pankaj Tripathi) 

Disruptor Award                                 -                  சனல்குமார் சசிதரன் (Sanal Kumar Sasidharan)

சிறந்த ஆவணப்படம்        -                 ஷட் அப் சோனா  (Shut Up Sona)



Post a Comment

Previous Post Next Post